'பீஸ்ட்' படத்திற்கு குவிந்த நெகட்டிவ் விமர்சனம்.. விஜய் செய்த காரியம்: நெகிழ்ச்சியுடன் பேசிய நெல்சன்.!

‘பீஸ்ட்’ படத்தால் எந்தளவு நெகட்டிவ் விமர்சனத்தை சந்தித்தாரோ, அதை விட அதிகமாக தற்போது ‘ஜெயிலர்’ படத்திற்காக கொண்டாடப்பட்டு வருகிறார் நெல்சன் திலீப்குமார். அந்தளவிற்கு பிரம்மாண்ட வெற்றியை படைத்து, ரஜினி ரசிகர்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்துள்ளது ‘ஜெயிலர்’. இந்தப்படத்தால் குவிந்து வரும் வாழ்த்தால் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் உள்ளார் நெல்சன் திலீப்குமார்.

நயன்தாரா நடிப்பில் வெளியான ‘கோலமாவு கோகிலா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன் திலீப்குமார். தனது முதல் படத்திலே வித்தியாசமான இயக்கத்தால் கவனம் ஈர்த்த நெல்சன், அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘டாக்டர்’ படத்தினை இயக்கினார். இந்தப்படம் ரூ. 100 கோடி கிளப்பில் இணைந்து சாதனை படைத்தது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இதனையடுத்து பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் விஜய்யை இயக்க கமிட் ஆனார் நெல்சன் திலீப்குமார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் ‘பியஸ்ட்’ படத்தில் நடித்தார் விஜய். ஆனால் இந்தப்படத்தின் ரிசல்ட் தான் சொதப்பிவிட்டது. அதுமட்டும் இல்லாமல் ஏகப்பட்ட ட்ரோல்களையும் சந்தித்தது இந்தப்படம்.

இதனால் நெல்சனை விஜய் ரசிகர்கள் ரொம்பவே வறுத்தெடுத்தனர். இந்நிலையில் ‘ஜெயிலர்’ படம் வெளியாகி வசூல் சாதனை படைத்து வரும் நிலையில், ‘பீஸ்ட்’ படம் குறித்தும் சில பேட்டிகளில் பேசி வருகிறார் நெல்சன் திலீப்குமார். இந்நிலையில் லேட்டஸ்ட் நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், ‘பீஸ்ட்’ படத்தின் நெகட்டிவ் விமர்சனங்கள் 3-4 நாட்களுக்கு மட்டுமே என்னை பாதித்தது.

ஜெயிலரின் இமாலய வெற்றி: அடுத்த படம் குறித்த ஷாக் தகவலை வெளியிட்ட நெல்சன் திலீப்குமார்.!

மேலும், ‘பீஸ்ட்’ படத்திற்கு நெகட்டிவ் விமர்சனம் குவிந்ததில் இருந்து விஜய் சார் தினமும் நான் என்ன செய்கிறேன் என்பதை செக் பண்ணார். அவருடைய மேலாளர் மூலமாக நான் ஓகேயா என்பதையும் பார்த்தார். ‘பீஸ்ட்’ படத்தோட ஷுட்டிங் கேப்பில் கேரவன் கூட போக மாட்டார். நீங்கெல்லாம் ஜாலியா இருக்கீங்க. நான் மட்டும் அங்க இருக்கனுமா? நானும் இங்கயே இருக்கேன்னு சொல்வார்.

காலேஜ் நாட்கள்ல இருந்தே நான் விஜய் சாரோட ரசிகன். ‘பீஸ்ட்’ படம் மூலமாக என்னோட கனவு எல்லாத்தையும் நிறைவேத்தி கிட்டேன். இவ்வாறு அந்த நேர்காணலில் நடிகர் விஜய் பற்றி நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார் நெல்சன் திலீப்குமார். அவரின் பேட்டியை பார்த்த ரசிகர்களும் இந்த மனசு யாருக்கு வரும்? தளபதி விஜய் எப்பவும் தங்கமான மனசுக்காரர் என கூறி வருகின்றனர்.

ரூ. 500 கோடியை கடந்த ‘ஜெயிலர்’ பட வசூல்: சத்தமில்லாமல் வெற்றியை கொண்டாடிய ரஜினி.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.