வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பெங்களூரு:சந்திரயான்3 ன் மூன்று குறிக்கோள்களில் இரண்டு குறிக்கோள்களை வெற்றிகரமாக நிறைவேற்றியது என இஸ்ரோ தெரிவித்து உள்ளது.
இது குறித்து இஸ்ரோ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது: சந்திரயான் 3 திட்டத்தின் மூன்று குறிக்கோள்களில் இரண்டு குறிக்கோள்கள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு உள்ளது. முதல் குறிக்கோளான சாப்ட் லேண்டிங் முறையில் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் இறங்கியதன் மூலம் முதல் குறிக்கோள் மூன்று நாட்களுக்கு முன்பே நிறைவேறி உள்ளது. ரோவர் நிலவில் ஊர்ந்து செல்லும் இரண்டாவது குறிக்கோளும் வெற்றி கரமாக எட்டப்பட்டு விட்டது.
உந்துகலன் லேண்டர் ரோவர் ஆகியவற்றில் உள்ள கருவிகளும் இயல்பாக இயங்கி வருகின்றன. கடைசி குறிக்கோளான அறிவியல் ஆய்வுகளும் இயல்பாக நடைபெற்று வருகின்றன. இவ்வாறு இஸ்ரோ தெரிவித்து உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement