பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரணாவத், வடிவேலு உள்ளிட்டோர் நடித்துள்ள `சந்திரமுகி – 2′ படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
இவ்விழாவில் பேசிய இயக்குநர் பி.வாசு, “தமிழ் சினிமாவிற்குக் கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் சுபாஸ்கரன் சார். ரஜினி சாரிடம் ‘சந்திரமுகி 2’ பண்ணுறேன்னு சொன்னேன். அதற்கு அவர், ‘நான் வணங்குற என் குருவை வேண்டுகிறேன். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெறும்’ என்றார்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/212490_thumb_665.jpg)
இப்படத்தின் ஒரு தொடர்ச்சி வடிவேல் சார்தான். அவர் மாறி ஓருத்தர் எல்லாம் வீட்டில் உட்காரக் கூடாது. அவர் வீட்டில் உட்கார்ந்தா மக்களுக்கு நோய் வரும். நம்மைச் சிரிக்கவைத்துக் குணப்படுத்தும் மருத்துவர் அவர். இப்படத்தில் எல்லாருக்கும் ஒரு கதை இருக்கும். ‘சந்திரமுகி’ கதாபாத்திரத்திற்கு மட்டும் யாரைப் போடலாம் என்று நீண்ட நாள் காத்திருந்தோம்.
அப்புறம் வேற ஒரு கதை சொல்ல, கங்கனா ரணாவத் கிட்ட போனேன். ‘உங்க ‘சந்திரமுகி’ல நான் ஏன் பண்ணக் கூடாது’ என்று அவங்களே கேட்டாங்க. இதுக்கு முன்னாடி அவங்களா வாய்ப்பு கேட்டு இருப்பாங்களானு எனக்குத் தெரியல. லாரன்ஸ் மாஸ்டர் ரெண்டு விதமாக நடிச்சிருக்கிறார். வேட்டையனைச் சாதாரணமாக நினைக்காதீங்க… படத்துல இன்னொருத்தணும் வருவான். பல விஷயங்கள் படத்தில் இருக்கு.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/F4ZGh5KaMAAWu5T.jpeg)
எப்போதும் படம் ஆரம்பிக்கும் போது கடவுளை வேண்டிப்பேன். வெளியாகும் போது அதைப் பார்க்கும் மக்களை வேண்டுவேன். நிச்சயம் இப்படம் வெற்றியடையும் என்று நம்புகிறேன். இப்படத்தில் எல்லாச் சாதனைகளையும் செய்தவர் கீரவாணி சார். இன்று ‘சந்திரயான் 3’-ஐ வெற்றி அடையச் செய்த விஞ்ஞானிகளுக்கு ‘சந்திரமுகி 2’ சார்பா வாழ்த்துகள். அவர்கள் செய்த சாதனைகளைப் பார்த்தால் நான் ஒண்ணுமே பண்ணல. படத்தில் வேலை பார்த்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி” என்று கூறினார்.