Sony Xperia 5 V : செப்டம்பர் 1-ல் வெளியாகிறது சோனி எக்ஸ்பீரியா 5 V! டூயல் கேமரா, ஸ்னாப்டிராகன் ப்ராசஸர் மற்றும் முழு விவரங்கள்!

சோனி நிறுவனத்தின் அடுத்த வெளியீடாக வர உள்ள Sony Xperia 5 V செப்டம்பர் 1ம் தேதி வெளியாக உள்ளதாக அதிகாரபூர்வ தகவலை தெரிவித்துள்ளது சோனி நிறுவனம். இந்நிலையில் அந்நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட ப்ரோமோ வீடியோ மூலமாகவும், Geekbench தளத்தில் வெளியாகியுள்ள தகவல்களின் அடிப்படையிலும் சோனி எக்ஸ்பீரியா 5 V – ல் இடம்பெறும் சிறப்பம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

​Sony Xperia 5 V வெளியீடுஜப்பானை மையமாக கொண்டு இயங்கி வரும் முன்னணி டெக் நிறுவனமான சோனி தனது Sony Xperia 5 V மொபைலை வருகின்ற செப்டம்பர் மாதம் 1ம் தேதி வெளியிட உள்ளதாக அந்த நிறுவனமே அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. Sony Xperia 5 V மாடலின் சிறப்பம்சங்கள் குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாக வலம் வருகிறது.
​Geekbench தளம்சோனி நிறுவனம் Sony Xperia 5 V -ன் எந்த விதமான சிறப்பம்சங்கள் குறித்த தகவலையும் வெளியிடவில்லை. ஆனால்,Geekbench தளத்தில் இடம்பெற்றுள்ள டிவைஸ் கோட் XQ-DE54 என்று வெளியிடப்பட்டிருக்கும் சோனி நிறுவனத்தின் மாடல் மொபைல் Sony Xperia 5 V என்று நம்பப்படுகிறது. இந்நிலையில், அந்த தளத்தில் வெளியாகியுள்ள விவரங்களின்படி, அந்த டிவைஸில் Snapdragon 8 Gen 2 SoC ப்ராசஸர், 8GB ரேம், ஆண்ட்ராய்டு 13 ஆகியவை இடம்பெற்றுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் Sony Xperia 5 V மாடலில் இடம்பெறும் சிறப்பம்சங்கள் குறித்து டிப்ஸ்டர்கள் அளித்துள்ள தகவலின்படி அதன் சிறப்பம்சங்கள் என்ன என்பதை பார்க்கலாம்.
​Sony Xperia 5 V டிஸ்பிளே மற்றும் ஸ்டோரேஜ்Sony Xperia 5 V மொபைலில் 6.3 – இன்ச் OLED டிஸ்பிளே மற்றும் 120Hz வசதிகள் இடம்பெற உள்ளதாக லீக்ஸ்டர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் இதில் 12GB ரேம் மற்றும் 512GB ஸ்டோரேஜ் வசதி இடம்பெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
​Sony Xperia 5 V கேமரா மற்றும் பேட்டரிSony Xperia 5 V – ல் இடம்பெறும் கேமராவை பொறுத்தவரை 12 மெகாபிக்ஸல் பிரைமரி கேமரா, 12 மெகாபிக்ஸல் டெலிபோட்டோ கேமரா, 12 மெகாபிக்ஸல் அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் முன்னால் 12 மெகாபிக்ஸல் கேமரா இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் டிப்ஸ்டர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இதில், 5000mAh பேட்டரி மற்றும் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியை வழங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
​நிறங்கள் மற்றும் இதர விவரங்கள்டிப்ஸ்டர்கள் வெளியிட்டுள்ள தகவலின்படி, Sony Xperia 5 V கருப்பு, நீலம் , வெள்ளை ஆகிய நிறங்களில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த டிவைஸ் ஆண்ட்ராய்டு 13 அடிப்படையில் இயங்கும் என்றும் தகவல்கள் பரவி வருகின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.