உகண்டா பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் சபாநாயகரைச் சந்தித்தனர்

உகண்டா பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ எலெய்ஜா ஒகுபு மற்றும் கௌரவ அப்து கடுன்டு ஆகியோர் மரியாதையின் நிமித்த சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவை (24) பாராளுமன்றத்தில் சந்தித்தனர்.

2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உகண்டாவில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய நாடுகளின் சபாநாயகர்கள் மற்றும் தலைமைதாங்கும் அதிகாரிகளின் 27வது மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு இவர்கள் சபாநாயகருக்கு அழைப்பு விடுத்தனர்.
இலங்கைக்கும் உகண்டாவுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டு பரஸ்பர கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.