வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: சர்வதேச நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளாக, (சிஇஓ) இந்தியர்கள் அல்லது இந்திய வம்சாவளியினர் இருப்பது, வியப்பதாக உள்ளதாக, பிரபல தொழிலதிபரும், ஸ்பேஸ்எக்ஸ், டுவிட்டர் நிறுவன தலைவருமான எலான் மஸ்க் கூறியுள்ளார்.
ஆல்பாபெட் சிஇஓ ., ஆக சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட், யூடியூப், அடோல் நிறுவனங்களின் சிஇஓ.,க்களாக சத்யநாதெல்லா, நீல் மோகன், ஷாந்தனு நாராயன் ஆகியோர் உள்ளனர். அதேபோல் உலக வங்கி குரூப்பின் 14வது தலைவராக அஜய் பங்காவும், ஸ்டார் பக்ஸ் சிஇஓ ஆக லஷ்மன் நரசிம்மன், காக்னிசன்ட் சிஇஓ ஆக ரவிகுமார், மைக்ரான் டெக்னாலஜியின் சிஇஓ ஆக சஞ்சய் மெஹ்ரோத்ரா ஆகியோர் உள்ளனர்.
மேலும் ஆல்பெர்டசன், நெட் ஆப், பாலோ ஆல்டோ நெட்வொர்க்ஸ், அரிஸ்டா நெட்வொர்க்ஸ், நோவர்டிஸ், ஸ்டார்பக்ஸ், மைக்ரான் டெக்னாலஜி,ஒன்லிபேன்ஸ்,மோடோரோலா மொபிலிடி, காக்னிசன்ட், வைமியோ ஆகிய சர்வதேச நிறுவனங்களின் சிஇஓ எனப்படும் தலைமை நிர்வாக அதிகாரிகளாக இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் உள்ளனர்.
![latest tamil news](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/gallerye_135220908_3415241.jpg)
இந்நிலையில், எக்ஸ் (முன்பு டுவிட்டர் என அழைக்கப்பட்டது) சமூக வலைதளத்தில் இந்த பதிவு வெளியானது. இதற்கு பதிலளித்துள்ள ‛எக்ஸ்’ , டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவவனங்களின் உரிமையாளரான எலான் மஸ்க், ‛‛ ஈர்க்கக்கூடியது” என வியப்புடன் பதிலளித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர், அடுத்தாண்டு இந்தியா செல்வதற்கு ஆர்வமாக உள்ளதாக எலான் மஸ்க் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement