ஆப்பிள் அடுத்த மாதம் ஐபோன் 15 தொடரை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த நிறுவனம் தனது அடுத்த தொடரைக் கொண்டு வருவதால், முந்தைய மாடல்களின் விலையைக் அதிரடியாக குறைக்கிறது. ஆனால் இந்த முறை ஐபோன் 14-ன் விலை ஏற்கனவே சற்று குறைந்துள்ளது. பிளிப்கார்ட்டில் இப்போது பண்டிகை கால விற்பனை நடந்து வருகிறது. இந்த விற்பனையில், ஐபோன் 14-ன் விலை கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஒரு புதிய ஐபோனைப் பெற விரும்பினால் மற்றும் பட்ஜெட் குறைவாக இருந்தாலும் கூட ஐபோன் வாங்க இப்போது சிறந்த வாய்ப்பு. 3 ஆயிரத்துக்கும் குறைவான விலையில் நீங்கள் ஆப்பிள் ஐபோனை வீட்டிற்கு எடுத்துச் செல்ல முடியும். கேட்கும்போதே உங்களுக்கு ஆச்சரியம் வரலாம். அதனால், ஐபோன் 14-ஐ இவ்வளவு மலிவாக வாங்குவது எப்படி? என்று பார்க்கலாம்…
ஐபோன் 14 விலை குறைப்பு
ஐபோன் 14-ன் எம்ஆர்பி ரூ.79,900 என்றாலும், பிளிப்கார்ட்டில் ரூ.67,999க்கு விற்கப்படுகிறது. அதாவது முழு 14% தள்ளுபடி வழங்கப்படுகிறது. பிளிப்கார்ட்டில் இருந்து ரூ.11,901 தள்ளுபடி பெறப்படுகிறது. இது தவிர, வங்கி மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகையும் உள்ளது. இதன் காரணமாக போனின் விலை கணிசமாகக் குறைக்கப்படும்.
iPhone 14 வங்கிச் சலுகை
ஐபோன் 14 வாங்க HDFCயின் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால், 4 ஆயிரம் ரூபாய் முழுத் தள்ளுபடி கிடைக்கும். அதன் பிறகு போனின் விலை ரூ.63,999 ஆக இருக்கும். இது தவிர, ஒரு எக்ஸ்சேஞ்ச் சலுகையும் உள்ளது, இது விலையை மேலும் குறைக்கும்.
iPhone 14 எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்
iPhone 14-ல் ரூ.61,449 எக்ஸ்சேஞ்ச் சலுகை கிடைக்கிறது. பழைய போனை எக்ஸ்சேஞ்ச் செய்தால் இவ்வளவு தள்ளுபடி கிடைக்கும். ஆனால் உங்கள் பழைய போனின் நிலை நன்றாகவும், லேட்டஸ்ட் மாடலாகவும் இருந்தால் மட்டுமே ரூ.61,499 முழுத் தள்ளுபடி கிடைக்கும். அந்தவகையில் உங்களுக்கு முழுமையாக ஆபர் கிடைத்தால் மட்டுமே போனின் விலை ரூ.2,550 ஆக இருக்கும். ஆப்பிளின் சமீபத்திய தொலைபேசியான இதில் பல அட்டகாசமான அம்சங்கள் இருக்கின்றன.