வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது பிரிவு 4 ஆண்டுகளுக்கு முன்னர் ரத்து செய்யப்பட்டது செல்லும் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வாதிட்டது. அதேநேரத்தில் மத்திய அரசு தரப்பு நோக்கி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும் சரமாரியான கேள்விகளை எழுப்பினார்.
ஜம்மு – காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் வகையில், அரசியல் சாசனத்தின், 370வது பிரிவு நடைமுறையில் இருந்தது. இதன்படி, காஷ்மீருக்கென தனி அரசியல் சாசனம், கொடி, தன்னாட்சி அதிகாரம் போன்ற சலுகைகள், அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தன.
கடந்த 2019, ஆக., 5ல், ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் அளிக்கும் இந்த சட்டப் பிரிவை நீக்கும் மசோதா பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டது. ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அதிகாரத்தை நீக்கும் நடவடிக்கைகளை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்ததில், 20க்கும் மேற்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்குகளை ஐந்து நீதிபதிகள் அமர்வு விசாரணை நடத்தும் என, உச்ச நீதிமன்றம் அறிவித்திருந்தது. இந்த வழக்கு இன்று(ஆகஸ்ட் 28) உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு துஷார் மேத்தா வாதிட்டதாவது: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் முதலீடுகள் இல்லாம வளர்ச்சி என்பது சாத்தியமற்றது. தொழில் முதலீடுகளுக்கு 370வது பிரிவு தடையாக இருந்தது.
தற்போது 370வது பிரிவு ரத்துக்குப் பின்னர் தான் ஜம்மு காஷ்மீருக்கு முதலீடுகள் அதிக அளவில் கிடைக்கிறது. சுற்றுலாப் பயணிகளும் பெரும் எண்ணிக்கையில் வந்து செல்கின்றனர். 370வது பிரிவு நீக்கம் செல்லும். இவ்வாறு அவர் வாதிட்டார்.
தலைமை நீதிபதி கேள்வி
சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக நீதிமன்றத்தில் ஆஜரான மூத்த அரசியல் அறிவியல் விரிவுரையாளர் ஏன் இடைநீக்கம் செய்யப்பட்டார். இது பழிவாங்கல் செயலா?. அவர் ஏன் இடைநீக்கம் செய்யப்பட்டார் என்பதைக் கண்டறியவும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உயர் சட்ட அதிகாரிக்கு உத்தரவிட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement