இதுகுறித்து டிப்ஸ்டர் முகுல் ஷர்மா BIS சான்றிதழ் இணையதளத்தில் வலம் வந்த இரு ஜியோ டிவைஸ்கள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். JBV161W1 மற்றும் JBV162W1 ஆகிய மாடல் நம்பர் கொண்ட ஜியோ போன்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவர் பகிர்ந்துள்ள தகவல்களின்படி, கீழ்காணும் சிறப்பம்சங்கள் ஜியோவின் மலிவு விலை 5G ஸ்மார்ட்போன்களில் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கடந்த பொதுக்குழு கூட்டத்தின் போதே, கூகுள் நிறுவனத்தோடு இணைந்து மலிவு விலை மொபைல்களை விரைவில் வெளியிட உள்ளதாக ஜியோ நிறுவனம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜியோ 5G ஸ்மார்ட்போன் ப்ராசஸர் மற்றும் ஸ்டோரேஜ்ஜியோ வெளியிட இருக்கும் குறைந்த விலை 5G ஸ்மார்ட்போன் Qualcomm Snapdragon 480+ SoC என்று லீக்ஸ்டர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், 4GB LPPDDR4X RAM மற்றும் 32GB ஸ்டோரேஜ் வசதி இடம்பெறலாம் என்று தெரிய வந்துள்ளது.
டிஸ்பிளே மற்றும் சார்ஜிங்முந்தைய தகவல்களின்படி, கங்கா என்ற கோட்நேம் கொண்ட மொபைலில் 6.5 – இன்ச் IPS LCD HD+ மற்றும் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் இடம்பெற்றுள்ளதாக லீக்ஸ்டர்கள் கூறியிருந்தனர். இது ஜியோ போனாக இருக்கலாம் என்றும் தகவல்கள் பரவி வருகின்றன. சார்ஜிங் வசதியை பொறுத்தவரை 5000mAh திறன்மிக்க பேட்டரி மற்றும் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜியோ 5G கேமராடிப்ஸ்டர்களின் தகவல்படி மலிவுவிலை ஜியோ 5G ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா அடிப்படையில் 13 மெகாபிக்ஸல் பிரைமரி கேமரா, 2 மெகாபிக்ஸல் செகண்டரி கேமரா வழங்கப்படலாம் என்று கணித்துள்ளனர். மேலும், சிறந்த செல்ஃபீ அனுபவம் மற்றும் வீடியோ கால் வசதிகளுக்காக 8 மெகாபிக்ஸல் செல்ஃபீ கேமரா முன்புற கேமராவாக வழங்கப்படலாம்.