பயங்கர விபத்திலும் உயிரை காப்பாற்றும்… டாப் 10 பாதுகாப்பான கார்கள் இதோ!

Safest Cars In India: இந்தியாவில் பாதுகாப்பான கார்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. வரி பாதுகாப்பு குறித்து மக்கள் மிகுந்த விழிப்புணர்வு பெற்றுள்ளனர். கார் பாதுகாப்பிலும் அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது, மேலும் கார் உற்பத்தியாளர்களும் கார்களை பாதுகாப்பாக மாற்ற தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். 

கார்களின் பாதுகாப்பு தொடர்பான இதுபோன்ற பல அம்சங்கள், கார்களில் கொடுக்கப்பட வேண்டிய கட்டாயம், மேலும் பல புதிய அம்சங்களை வரும் காலங்களில் கட்டாயமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது நாட்டில் விற்பனையாகும் டாப் 10 பாதுகாப்பான கார்களைப் பற்றி பார்த்தால், அவற்றில் ஃபோக்ஸ்வேகன், மஹிந்திரா மற்றும் டாடா மாடல்கள் பெரும்பாலவையாக இருக்கும். அவை குறித்து இதில் முழுமையாக காணலாம். 

1. ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ்

கிராஷ் டெஸ்டில் ஃபோக்ஸ்வேகன் விர்டஸுக்கு 5 நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீடு Global NCAP நிறுவனம் வழங்கியது. இது ஒரு பிரிமியம் மிட் சைஸ் செடான் வகை காராகும். இந்தியாவில் இதன் ஆரம்ப விலை ரூ.11.47 லட்சம் ஆகும் (Ex-Showroom).

2. ஸ்கோடா ஸ்லாவியா

Global NCAP நிறுவனத்தின் க்ராஷ் டெஸ்டில் ஸ்கோடா ஸ்லாவியா 5 நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டையும் பெற்றுள்ளது. விர்டஸைப் போலவே இதுவும் பிரீமியம் மிட் சைஸ் செடான் வகை கார் தான். இதன் ஆரம்ப விலை ரூ.11.39 லட்சம் ஆகும் (Ex-Showroom).

3. ஃவோக்ஸ்வேகன் டைகன் 

வோக்ஸ்வேகன் டைகன் ஒரு சிறிய எஸ்யூவி வகை காராகும். கிராஷ் டெஸ்டில் Global NCAP நிறுவனத்தால் 5 நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டையும் பெற்றுள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ. 11.61 லட்சமாக (Ex-Showroom) உள்ளது.

4. ஸ்கோடா குஷாக்

கிராஷ் டெஸ்டில் Global NCAP நிறுவனத்தால் ஸ்கோடா குஷாக் 5 நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டையும் பெற்றுள்ளது. டைகனைப் போலவே இதுவும் ஒரு சிறிய எஸ்யூவி வகையாகும். இரண்டும் ஒரே தளத்தை அடிப்படையாகக் கொண்டவை. இதன் ஆரம்ப விலை ரூ.11.59 லட்சமாக (Ex-Showroom) உள்ளது.

5. மஹிந்திரா ஸ்கார்பியோ-என்

மஹிந்திரா ஸ்கார்பியோ-என் ஒரு சக்திவாய்ந்த மற்றும் பிரபலமான எஸ்யூவி வகை கார் ஆகும். இது கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. கிராஷ் டெஸ்டில் Global NCAP நிறுவனத்தால் 5 நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப விலை சுமார் ரூ. 13 லட்சம் (Ex-Showroom).

மற்ற 5 கார்கள்

இவை தவிர, டாப்-10 பாதுகாப்பான கார்கள் என எடுத்துக்கொண்டால் அதில் இரண்டு மஹிந்திரா கார்கள் வரும். அவை மஹிந்திரா XUV300 மற்றும் மஹிந்திரா XUV700 ஆகும். Global NCAP மூலம் இந்த இரு காருக்கும் 5 நட்சத்திர மதிப்பீடு வழங்கப்பட்டுள்ளது. 

அதே நேரத்தில், மூன்று டாடா கார்களான டாடா பஞ்ச், டாடா அல்ட்ரோஸ் மற்றும் டாடா நெக்ஸான் ஆகியவையும் இந்த பட்டியலில் உள்ளன. அவை Global NCAP நிறுவனத்தால் 5 நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டையும் பெற்றுள்ளன. இவற்றில், மலிவான கார் டாடா பஞ்ச் ஆகும். அதன் ஆரம்ப விலை ரூ. 6 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.