வருமான வரி ஆணையத்தின் புதுப்பிக்கப்பட்ட இணையதளம்! புது அப்டேட் என்னல்லாம் இருக்கு தெரியுமா?

இந்தியாவில் வரி கட்டும் நபர்களின் அனுபவத்தை மேம்படுத்தவும், வரி குறித்த சேவைகளில் புதிய டெக்னாலஜி மூலம் வரி செலுத்துபவர்களுக்கு செயல்பாடுகளை சுலபமாக்கவும் இந்திய தேசிய வருமான வரித்துறை இணையதளத்தை மறுவடிவமைப்பு செய்துள்ளது.

புதிய செட்டிங்ஸ், சேவைகள் உள்ளிட்ட புதுப்பிப்புகளோடு மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ள இந்த இணையதளத்தை மத்திய நேரடி வரிகள் ஆணையத்தின் தலைவர் நிதின் குப்தா தொடங்கி வைத்தார்.

ஒரே தளத்தில் பல்வேறு சேவைகள்

இந்த தளம் மூலம் வரி தொடர்பான தகவல்கள் மற்றும் சேவைகளை ஒரே இடத்தில் வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது வரி ஆணையம். வரி குறித்த சட்டங்கள், விதிமுறைகள், அறிவிப்புகள், ஆணைய குறிப்புக்கள் என எல்லாவற்றையும் ஒரே இடத்தில் பெறும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, வரி செலுத்துபவர்களுக்கு தேவையான சேவைகள் அனைத்தும் இந்த தளம் வாயிலாக கிடைக்கும்படியும் செய்யப்பட்டுள்ளது.

மெகா மெனு

பொதுவாக பல்வேறு இணையதளங்களை கணினிகள் மூலம் இயக்கும்போதே சுலபமாக இருக்கும். மொபைல் வழியாக பயன்படுத்தினால் அவ்வளவு எளிதாக இருக்காது. ஆனால், இந்த மறுவடிவமைப்பு செய்யப்பட்ட இணையதளம் ஸ்பெஷலாக மொபைல் மூலம் எளிதாக பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்துவது எப்படி என்பது தொடர்பான வீடியோ ஏற்பாடுகள், மற்றும் வழிகாட்டிகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், ‘ மெகா மெனு ’ என்ற அமைவின் கீழ் அனைத்து விதமான சேவைகளும் வழிகாட்டப்பட்டுள்ளன.

வரி சட்டங்கள் குறித்த அப்டேட்

வரி செலுத்துபவர்களுக்கு தேவையான வசதிகள் , வரிகள், சட்டங்கள், விதிகள், ஒப்பந்தங்கள் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்து கொள்ளும் வசதி ஆகியவை இந்த புதிய தளத்தில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. மேலும், தவணை தேதி குறித்த அறிவிப்புகள், டூல்ஸ் ஆலோசனைகள் என பல்வேறு வசதிகளும் வழங்கப்பட்டுள்ளது.

வரி செலுத்தும் மக்களின் செயல்பாடுகளை சுலபமாக்கவும், வரி செலுத்தும் அனுபவத்தை ஈஸியாக்கவும் இந்த அப்டேட்டை வழங்கியுள்ளது வருமான வரி ஆணையம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.