வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புடாபெஸ்ட்: உலக தடகளத்தில், 3000 மீ., ‘ஸ்டீபிள்சேஸ்’ ஓட்டத்தின் பைனலில் ஏமாற்றிய இந்திய வீராங்கனை பருல் சவுத்ரி 11வது இடம் பிடித்தார். இருப்பினும் 2024ம் ஆண்டு பாரிஸில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்.
ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில், உலக தடகள சாம்பியன்ஷிப் நடக்கிறது. பெண்களுக்கான 3000 மீ., ‘ஸ்டீபிள்சேஸ்’ ஓட்டத்தின் தகுதிச் சுற்றில் அசத்திய இந்தியாவின் பருல் சவுத்ரி பைனலுக்கு தகுதி பெற்றார். இதன்மூலம் உலக தடகள வரலாற்றில் ‘டிராக்’ பிரிவில் பைனலுக்கு முன்னேறிய 2வது இந்திய வீராங்கனையானார்.
இந்நிலையில், இன்று நடந்த பைனலில், 9 நிமிடம் 15.31 வினாடிகளில் இலக்கை அடைந்த பருல் சவுத்ரி 11வது இடம் மட்டுமே பிடித்தார். இது தேசிய சாதனை ஆகும். மேலும், 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement