Redmi 13 Pro-ன் சிறப்பம்சங்களை வெளியிட்டுள்ள Tenna இணையதளம்! அதிநவீன பேட்டரி மற்றும் டிஸ்பிளே முழு விவரங்கள்

இந்தாண்டு வெளியான Redmi note 12 pro 5G மற்றும் Redmi note 12 pro + 5G – ஐ தொடர்ந்து Redmi note 13 pro மற்றும் Redmi note 13 pro + மாடல்களை ஜியோமி வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில் 2312DRA50C மற்றும் 2312DRA50C மொபைல் என்ற மாடல் நம்பர் கொண்ட ஜியோமி மொபைல்கள் Tenna தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன. டிப்ஸ்டர் Digital Chat Station இது குறித்த தகவல்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். அதன்படி, Redmi note 13 pro மொபைலில் அதிநவீன பேட்டரி மற்றும் டிஸ்பிளே உள்ளிட்ட சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

​Tenna சான்றிதழ் தளம்Tenna தளத்தில் வெளியாகியுள்ள தகவல்களின்படி, 5,020mAh திறன்மிக்க பேட்டரி மற்றும் 6.67 இன்ச் OLED டிஸ்பிளே ஆகியவை இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், Redmi note 13 pro + மாடல் 18GB ரேம் மற்றும் 1TB ஸ்டோரேஜ் வசதியோடும், Redmi note 13 pro மாடல் 16GB ரேம் மற்றும் அதே 1TB ஸ்டோரேஜ் வசதியோடு வெளியாகலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், டிப்ஸ்டர்கள் கணிப்பின்படி இந்த மொபைலில் இடம்பெறும் சிறப்பம்சங்கள் குறித்து காணலாம்.
​பேட்டரி திறன் மற்றும் டிஸ்பிளேRedmi note 13 pro மொபைலில் 5020mAh திறன்மிக்க பேட்டரியும், Redmi note 13 pro + மாடலில் 4880mAh திறன்மிக்க பேட்டரியும் வழங்கப்படாலம் என்று தகவல் வெளியாகியுள்ளது. 6.67 இன்ச் OLED டிஸ்பிளே இடம்பெறும் என்று Tenna தளத்தில் வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில் தெரிய வந்துள்ளது.
​​கேமரா வசதிகள்Tenna தளத்தில் வெளியாகியுள்ள தகவல்களின் அடிப்படையில் Redmi note 13 pro மற்றும் Redmi note 13 pro + ஆகிய இரண்டு மொபைல்களுமே ட்ரிபிள் ரியர் கேமராவோடு வெளியாக வாய்ப்புள்ளது. அதில் பின்புறம் 200 மெகாபிக்ஸல் மெயின் கேமரா , 2 மெகாபிக்ஸல் அல்ட்ரா வைட் கேமரா மற்றும் முன்புறம் 2 மெகாபிக்ஸல் மேக்ரோ கேமரா இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது. செல்ஃபீ கேமராவை பொறுத்தவரை 16 மெகாபிக்ஸல் இடம்பெறலாம் என்றும் தெரிய வந்துள்ளது.
​Redmi note 13 pro மாடல்களின் ஸ்டோரேஜ் மற்றும் வேரியண்ட்டுகள்Tenna தளத்தில் வெளியாகியுள்ள தகவல்களின்படி, Redmi note 13 pro மற்றும் Redmi note 13 pro + ஆகிய இரண்டு மொபைல்களும் 4 விதமான ஸ்டோரேஜ் மற்றும் ரேம் வேரியண்ட்டுகளில் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும், Redmi note 13 pro மாடல் 16GB ரேம் மற்றும் 1TB வசதியோடும், Redmi note 13 pro + மாடல் 18GB ரேம் மற்றும் 1TB ஸ்டோரேஜ் வசதியோடும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.