சீமான் என் வாழ்க்கையை சீரழித்துவிட்டார்: போலீஸ் கமிஷனரிடம் நடிகை விஜயலட்சுமி புகார்

விஜய், சூர்யா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ப்ரெண்ட்ஸ் படம் மூலம் பிரபலமானவர் விஜயலட்சுமி. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானுக்கும், தனக்கும் திருமணமாகிவிட்டது என்றும், அவர் தன்னை ஏமாற்றிவிட்டார் என்றும் கூறி கடந்த 2011ம் ஆண்டு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் விஜயலட்சுமி.

ரஜினிக்கு யோகி ஆதித்யநாத் தான் Role Model – இயக்குனர் பிரவீன் காந்தி
அதில் இருந்து
சீமான்
மீது தொடர்ந்து புகார் தெரிவித்து வருகிறார். மேலும் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிடுகிறார். ஒரு முறை தற்கொலை செய்து கொள்ளவும் முயற்சி செய்தார்.

கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

சீமானால் தான் மன உளைச்சலில் இருப்பதாக கூறி வருகிறார். இந்நிலையில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சீமான் மீது நேற்று புகார் அளித்திருக்கிறார். அவருடன் தமிழர் முன்னேற்றப்படை அமைப்பின் தலைவி வீரலட்சுமியும் வந்திருந்தார்.

4 பக்கங்கள் கொண்ட புகார் மனுவை அளித்திருக்கிறார் விஜயலட்சுமி. புகார் அளித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த விஜயலட்சுமி கண்ணீருடன் கூறியதாவது,

உன்னை ஊர் அறிய மனைவியாக ஏற்றுக் கொள்கிறேன் என சீமான் தெரிவித்தார். அவர் சொன்னதை நம்பி கடந்த 2011ம் ஆண்டு நான் அளித்த புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என போலீசாரிடம் கேட்டுக் கொண்டேன்.

கூகுள் செய்திகள் பக்கத்தில் Samayam Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. உடனுக்குடன் செய்திகளை பெறுங்கள்

ஆனால் கொடுத்த வாக்கை காப்பாற்றாமல் சீமான் என்னை ஏமாற்றி என் வாழ்க்கையை சீரழித்துவிட்டார்.

அதனால் சீமான் மீதான வழக்கு விசாரணையை தொடர வேண்டும் என்று போலீஸ் கமிஷனரை சந்தித்து கோரிக்கை விடுத்திருக்கிறேன்.

இந்த விவகாரத்தில் திமுக அரசு, முதல்வர் ஸ்டாலின் என்ன நடவடிக்கை எடுப்பார் என்பதை பொறுத்து தான் எனக்கு வாழ்வா, சாவா என்கிற முடிவு இருக்கிறது.

நான் சீமான் மீது அளித்த புகார் குறித்து அதிமுக ஆட்சியில் பெரிதாக விசாரணை நடக்கவில்லை. என்னை மட்டும் விசாரித்தார்களே தவிர சீமானை அழைத்து விசாரிக்கவில்லை. சீமான் என்னுடன் வாழ்ந்தபோது எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட்டேன். அதில் அவர் என்னை மனைவி என்று கூறியிருப்பார். அவமானப்பட்டு இங்கு வந்து நின்று கொண்டிருக்கிறேன்.

பேசாமல் இறந்துவிடலாம் என்று கூட பல முறை நினைத்தது உண்டு. ஆனால் நான் வேறு ஒரு காரணத்திற்காக இறந்ததாக தகவல் எதுவும் வந்துவிடக் கூடாது என அமைதியாக இருந்துவிட்டேன். இனி இழக்க எதுவும் இல்லை. சீமானை நிச்சயம் கைது செய்ய வைப்போம் என்றார்.

நானும், செல்வராகவனும் ஏன் பிரிந்தோம்னு 2 பேருக்கு தான் தெரியும்: சோனியா அகர்வால்

பேட்டியின்போது செய்தியாளர் ஒருவர் விஜயலட்சுமியிடம் கேள்வி கேட்டார். அதற்கு அவர் அந்த செய்தியாளரை ஒருமையில் பேசினார். அதை பார்த்த பிற செய்தியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இதையடுத்து கோபத்துடன் அந்த இடத்தை விட்டு கிளம்பிச் சென்றார் விஜயலட்சுமி.

பெற்றோருக்கு தெரியாமல் காதலனை ரகசியமாக சந்தித்த ஸ்ரீதேவி மகள்

விஜயலட்சுமி புகார் அளித்துவிட்டு கண்ணீருடன் பேட்டி அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.