சென்னையின் அடடே `Train Hotel' | களைகட்டிய ஓணம் கொண்டாட்டம்! – News in Photos August 29, 2023 by விகடன் சென்னை: எம்.எல்.ஏ, எம்.பி-களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஆஜாரானர். விருதுநகர் அருள்மிகு ஸ்ரீ சொக்கநாத சுவாமி திருக்கோயில் ஆவணி தேரோட்டத்தில், சிவன் பார்வதி வேடம் அணிந்து நடனம் ஆடினர். சென்னை: நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர் சந்திப்பு. தஞ்சை பெரியகோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம். இலவச வீட்டு மனை பட்டா வழங்கக் கோரி, தேனி மாவட்ட ஆட்சியரிடம் முடிதிருத்துவோர் சங்கத்தினர் மனு அளித்தனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே, ரயில் பெட்டி வடிவத்தில் திறக்கப்பட்டிருக்கும் உணவகம். பங்குத்தொகை தருவதாகக் கூறி பல பேரிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்த மர்ஜுக் ட்ரான்ஸ்போர்ட் உரிமையாளரை உடனடியாக கைதுசெய்ய வலியுறுத்தி, பாதிக்கப்பட்டவர்கள் தஞ்சாவூர் பொருளாதாரக் குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்து முற்றுகையிட்டனர். நீலகிரி: தூய்மைப் பணியாளரான மாற்றுத்திறனாளி தந்தைக்கு பணி மாறுதல் கிடைத்தால், கல்வி பயில வசதியாக இருக்கும் என ஆறாம் வகுப்பு மாணவி மகாலக்ஷ்மி பெற்றோருடன் வந்து கலெக்டரிடம் மனு அளித்தார். தூத்துக்குடி மாவட்டம், முள்ளுர் கிராமத்தில் கண்மாய் நீர்வழிப் பாதையை அடைத்த தனியார் காற்றாலை நிறுவனம்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பா.ஜ.க. சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் அத்திக்கடவு அவினாசி திட்டத்தை விரைந்து முடிக்கக் கோரி, முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாஜலம் தலைமையில் அந்தப் பகுதி பொதுமக்கள் மனு கொடுக்க திரண்டு வந்தனர். திருநெல்வேலி: நயினார் குளத்தில் இருக்கும் மீன்களைப் பிடிப்பதற்கு உடனடியாக அனுமதி வழங்கக் கோரி, மீன் மாலை அணிந்து வந்த ஊர் மக்கள். நீலகிரி : பெம்பட்டி பகுதி மக்கள் பேருந்து வசதி வேண்டி, மண்டலப் போக்குவரத்து கழக பொது மேலாளர் நடராஜனிடம் மனு அளித்தனர். வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட நபர்கள்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள். மதுரை, காந்தி நகர் தபால் நிலையத்திலிருந்து குருப் 4 தேர்வுக்கான புத்தகங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, பா.ஜ.க-வினர் தபால் மூலம் அனுப்பிவைத்தனர். 3 மாதங்களுக்குப் பிறகு நேற்று கூடியது வேலூர் மாநகராட்சிக் கூட்டம். Source link