'ஜெயிலர்' கண்டிப்பாக ஹிட்டடிக்கும்: அப்பவே அடித்து சொன்ன தளபதி விஜய்..!

‘ஜெயிலர்’ பட இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தொடர்ச்சியாக நடிகர் விஜய் குறித்து பல பேட்டிகளில் நெகிழ்ச்சியுடன் பேசி வருகிறார். அவர் பகிரும் தகவல்கள் எல்லாம் சோஷியல் மீடியாவில் தளபதி ரசிகர்களிடையே கவனம் ஈர்த்து வருகிறது. இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜய் குறித்து இயக்குனர் நெல்சன் திலீப்குமார் பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நயன்தாரா நடிப்பில் ‘கோலமாவு கோகிலா’ என்ற வித்தியாசமான படத்தை இயக்கி கோலிவுட் திரையுலகினர் மத்தியில் கவனம் ஈர்த்தவர் நெல்சன் திலீப்குமார். முதல் படத்திலே வெற்றியை சுவைத்த அவர், தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘டாக்டர்’ படத்தை இயக்கினார். இந்தப்படம் ரூ. 100 கோடி கிளப்பில் இணைந்து சாதனை படைத்தது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்த வெற்றியை தொடர்ந்து தான் விஜய்யை இயக்க கமிட் ஆனார் நெல்சன் திலீப்குமார். கோலிவுட் சினிமாவே பேரிடம் எதிர்பார்த்த இந்த காம்போவின் கூட்டணியில் ‘பீஸ்ட்’ படம் வெளியானது. அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பி ரிலீசான இந்தப்படம் ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்களை குவித்தது.

அதுமட்டும் இல்லாமல் பல ட்ரோல்களையும் சந்தித்தது. ‘பீஸ்ட்’ படத்திற்கு குவிந்த நெகட்டிவ் விமர்சனத்தால் ரஜினியை இயக்கும் வாய்ப்பை நெல்சன் தவறவிடலாம் என்றெல்லாம் பல வதந்திகள் பரவின. இதுக்குறித்து ரஜினியே ‘ஜெயிலர்’ பட ஆடியோ லான்ச்சில் பேசினார். ‘பீஸ்ட்’ பட தோல்விக்கு பிறகு தற்போது ‘ஜெயிலர்’ வெளியாகி இயக்குனர் நெல்சன் திலிப்குமாரை உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளது.

‘பீஸ்ட்’ படத்திற்கு குவிந்த நெகட்டிவ் விமர்சனம்.. விஜய் செய்த காரியம்: நெகிழ்ச்சியுடன் பேசிய நெல்சன்.!

அந்தளவிற்கு ஒரு வெறித்தனமான வெற்றியை ‘ஜெயிலர்’ படம் மூலமாக கொடுத்துவிட்டார் நெல்சன் திலீப்குமார். இந்நிலையில் தற்போது அளித்த பேட்டி ஒன்றில் பேசிய நெல்சன், விஜய் சார் ஆறு மாசத்துக்கு முன்னாடியே ‘ஜெயிலர்’ படம் மூலம் நெல்சன் பிரம்மாண்ட வெற்றியை தருவார். பொறுத்திருந்து பாருங்க என விடிவி கணேஷ் சார்க்கிட்ட கூறினார்.

மேலும், பீஸ்ட் படத்திற்கு நெகட்டிவ் விமர்சனம் வந்தாலும் விஜய் சார் ரொம்பவே பாசிட்டிவாகவும், என்னை தொடர்ந்து ஊக்குவிப்பவராகவும் இருந்தார். நெகட்டிவ் விமர்சனம் என்னை பாதிக்க கூடாது என ரொம்பவே கவனமாக பார்த்து கொண்டார். இதற்காக மாதத்திற்கு ஒரு முறை என்னை அழைத்து நான் எப்படி இருக்கேன் என பார்த்து தொடர்ந்து மோட்டிவேட் பண்ணார் என நடிகர் விஜய் குறித்து நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார் இயக்குனர் நெல்சன் திலீப்குமார்.

Leo: ‘ஜெயிலர்’ கொண்டாட்டத்துக்கு இடையில் வெளியாகும் ‘லியோ’ அப்டேட்: சம்பவம் இருக்கு..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.