பழசை மறக்காத ரஜினி! பஸ் டிப்போவிற்கு சென்று பணிபுரிந்த இடத்தை பார்த்து பரவசம்!!| Rajini, who never forgets fruit, went to the bus depot and was thrilled to see the place where he worked

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

பெங்களூரு : பெங்களூரு சென்ற நடிகர் ரஜினிகாந்த் தான் வேலை பார்த்த அரசு போக்குவரத்து கழக பஸ் டிப்போவிற்கு சென்று தனது மலரும் நினைவுகளை நினைத்து பரவசமானார்.

ஜெயிலர் படத்தின் வெற்றியால் மகிழ்ச்சியில் உள்ள ரஜினி, அடுத்து தனது 170வது படமாக ‛ஜெய் பீம்’ படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கத்தில் நடிக்க போகிறார். சில தினங்களுக்கு முன் இந்த படத்தின் பூஜை சத்தமின்றி நடந்தது. செப்டம்பரில் இதன் படப்பிடிப்பு துவங்க உள்ளது.

latest tamil news

சமீபத்தில் தான் இமயமலைக்கு ஆன்மிக சுற்றுபயணம் சென்றுவிட்டு திரும்பினார் ரஜினி. இன்று(ஆக., 29) திடீரென பெங்களூரு சென்றார் ரஜினி. அங்குள்ள ராகவேந்திரர் கோயிலுக்கு சென்று வழிபட்டார். பின்னர் பிஎம்டிசி எனப்படும் பெங்களூரு பெருநகர போக்குவரத்து கழகத்திற்கு திடீரென விசிட் அடித்தார். அங்குள்ள போக்குவரத்து ஊழியர்களிடம் கலந்துரையாடினார்.

ரஜினி உடன் போக்குவரத்து ஊழியர்கள் போட்டோ, வீடியோ எடுத்து மகிழ்ந்தனர். அவர்களுடன் குரூப் போட்டோவும் எடுத்துக் கொண்டார் ரஜினி. இதுதொடர்பான போட்டோ, வீடியோக்கள் வெளியாகி வைரலாகின.

latest tamil news

ரஜினி சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்னர் பெங்களூரு போக்குவரத்து கழகத்தில் தான் கன்டக்ட்டராக வேலை பார்த்து வந்தார். பழசை மறக்காத ரஜினி அந்த ஞாபகத்தின் அடையாளமாய் இன்று அங்கு சென்று தனது மலரும் நினைவுகளை அசை போட்டுக் கொண்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.