வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா சான்றிதழ் அவசியம் இல்லை – சீனா அறிவிப்பு

பீஜிங்,

கொரோனா தொற்று முதன்முதலாக 2019-ம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்டது. பின்னர் உலகம் முழுவதும் வேகமாக பரவியது. இதனை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் பலவும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தன. மேலும் வெளிநாட்டு பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. அதன்படி தங்களது நாட்டுக்கு வருபவர்கள் கொரோனா இல்லை என்ற சான்றிதழை வைத்திருப்பதை பல நாடுகள் கட்டாயமாக்கின.

ஆனால் கொரோனா தடுப்பூசி, முகக்கவசம் போன்றவற்றால் அதன் பாதிப்பு தற்போது வெகுவாக குறைந்துள்ளது. எனவே கொரோனா கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் தங்களது நாட்டுக்கு வருபவர்கள் கொரோனா இல்லை என்ற சான்றிதழ் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என சீன அரசாங்கம் தற்போது தெரிவித்துள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.