Asia Cup 2023: மினி உலகக் கோப்பைக்கு ரெடியா… நாளை முதல் எப்போது, எதில் இலவசமாக காணலாம்?

Asia Cup 2023: ஆசியக் கோப்பை தொடர் நாளை (ஆக. 30) முதல் நடைபெற இருக்கிறது. பாகிஸ்தான் நாட்டின் முல்தானில் உலக நம்பர் 1 ஓடிஐ அணியான பாகிஸ்தான், நேபாளத்தை நாளை எதிர்கொள்கிறது. இந்த ஆண்டு ஆசிய கோப்பை ‘ஹைப்ரிட் மாடலில்’ பாகிஸ்தானும் இலங்கையும் இணைந்து போட்டிகளை நடத்துகின்றன.

இந்தியாவின் அனைத்து போட்டிகளும் இலங்கையில் நடைபெறும் அதே வேளையில் பாகிஸ்தான் சில போட்டிகளை முல்தான் மற்றும் லாகூரில் விளையாடும். பெரும் எதிர்பார்ப்பில் உள்ள இந்தியா – பாகிஸ்தான் போட்டி கண்டியில் செப். 2ஆம் தேதி நடைபெறும். கடந்தாண்டு துபாயில் நடைபெற்ற ஆசியக் கோப்பையின் (டி20 தொடர்) தற்போதைய சாம்பியனாக இலங்கை உள்ளது. இருப்பினும் கடந்த ஆண்டு டி20 வடிவத்தில் நடைபெற்ற நிலையில், இம்முறை ஒருநாள் போட்டி வடிவில் நடைபெறுகிறது. 

கடைசியாக 2018ஆம் ஆண்டு துபாயில் நடந்த ஒருநாள் போட்டி வடிவிலான ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் வங்கதேசத்தை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது. ரோஹித் சர்மா தற்செயலாக அந்த தொடரிலும் இந்திய அணியின் கேப்டனாக இருந்தார், வழக்கமான கேப்டன் விராட் கோலி அந்த தொடரில் ஓய்வில் இருந்தார்.

ரோஹித் ஷர்மா 2023ஆம் ஆண்டிலும் இந்திய அணியை தலைமையேற்று உள்ளார். மேலும், செப்டம்பர் 2ஆம் தேதி கண்டியில் உள்ள பல்லேகல்லே சர்வதேச மைதானத்தில் பாபர் அசாம் தலைமையிலான பரம எதிரியான பாகிஸ்தான் அணியை ரோஹித் தலைமையில் இந்தியா எதிர்கொள்கிறது. இந்தியா குரூப் ஏ-இல் இடம்பிடித்துள்ளது, மேலும், செப். 4ஆம் தேதி அதே கண்டி பல்லேகல்லே சர்வதேச மைதானத்தில் இந்தியா, நேபாளத்தை சந்திக்கிறது.

பி குழுவில் நடப்பு ஆசியக் கோப்பை சாம்பியனான இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள் பங்கேற்கின்றன. இரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும். இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறினால், மீண்டும் செப்டம்பர் 10ஆம் தேதி கொழும்பு ஆர்.பிரேமதாசா மைதானத்தில் மோதும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, சூப்பர் 4 சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 1 முறை மோதும். இதில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும். 

ஆசிய கோப்பை 2023 அட்டவணை

ஆகஸ்ட் 30: பாகிஸ்தான் vs நேபாளம், முல்தான், பாகிஸ்தான், பிற்பகல் 2:30

ஆகஸ்ட் 31: வங்கதேசம் vs இலங்கை, கண்டி, இலங்கை, மாலை 3 மணி

செப்டம்பர் 2: பாகிஸ்தான் vs இந்தியா, கண்டி, இலங்கை, மாலை 3 மணி

செப்டம்பர் 3: வங்கதேசம் vs ஆப்கானிஸ்தான், லாகூர், பாகிஸ்தான், பிற்பகல் 2:30

செப்டம்பர் 4: இந்தியா vs நேபாளம், கண்டி, இலங்கை, மாலை 3 மணி

செப்டம்பர் 5: இலங்கை vs ஆப்கானிஸ்தான், லாகூர், பாகிஸ்தான், பிற்பகல் 2:30

செப்டம்பர் 6: A1 vs B2, லாகூர், பாகிஸ்தான், பிற்பகல் 2:30

செப்டம்பர் 9: B1 vs B2, கொழும்பு, இலங்கை, மாலை 3 மணி

செப்டம்பர் 10: A1 vs A2, கொழும்பு, இலங்கை, மாலை 3 மணி

செப்டம்பர் 12: A2 vs B1, கொழும்பு, இலங்கை, மாலை 3 மணி

செப்டம்பர் 14: A1 vs B1, கொழும்பு, இலங்கை, மாலை 3 மணி

செப்டம்பர் 15: A2 vs B2, கொழும்பு, இலங்கை, மாலை 3 மணி

செப்டம்பர் 17: இறுதிப்போடி கொழும்பு, இலங்கை, பிற்பகல் 3 மணி

போட்டியை எதில் காண்பது?

ஆசிய கோப்பை 2023 தொடரை இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் சேனல்களில் நேரலையில் காணலாம். மொபைல் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் செயலியில் இலவசமாக நேரலையிலேயே காணலாம். ஆசியா கோப்பை 2023 லைவ்ஸ்ட்ரீமிங்கை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இணையதளத்திலும் ஆப்ஸிலும் டிவி மற்றும் ஸ்ட்ரீமிங் சாதனங்களில் கட்டணச் சந்தாவுடன் ரசிகர்கள் பார்க்கலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.