Vivo V29e 64MP கேமரா, 5000mAh பேட்டரி , Snapdragon 695 ப்ராசஸரோடு வெளியீடு! செப்டம்பர் 7 முதல் விற்பனை!

Vivo நிறுவனத்தின் அடுத்தகட்ட அதிநவீன மொபைலான Vivo V29e வெளியாகி உள்ளது. 5000mAh பேட்டரி, 64 மெகாபிக்ஸல் கேமரா, Snapdragon 695 ப்ராசஸர் என பல்வேறு சிறப்பம்சங்களோடு Vivo V29e அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. செப்டம்பர் 7 முதல் விற்பனைக்கு வரவுள்ள இந்த மொபைலுக்கு பல்வேறு முன்பதிவு சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளது.

​Vivo V29e-ல் அதிநவீன ப்ராசஸர் மற்றும் ஸ்டோரேஜ்Vivo V29e மொபைலில் 8GB Ram உடன் அதிநவீன Qualcomm Snapdragon 695 SoC ப்ராசஸர் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 8GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் வசதி மற்றும் 8GB ரேம் + 256GB ஸ்டோரேஜ் வசதி பொறுத்தப்பட்டுள்ளது

​கேமரா வசதிகள்Vivo V29e மொபைலின் கேமரா வசதியை பொறுத்தவரை பின்புறம் டூயல் ரியர் கேமராக்கள் அடிப்படையில் OIS வசதியுடன் கூடிய 64 மெகாபிக்ஸல் கேமரா , 8 மெகாபிக்ஸல் வைட் ஆங்கிள் கேமரா மற்றும் முன்புறம் சிறந்த செல்ஃபீ மற்றும் வீடியோ காலிங் வசதிக்காகவும் 50 மெகாபிக்ஸல் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது.
​பெரிய டிஸ்பிளே அமைவுகள்Vivo V29e மொபைலில் 2400 x 1080 பிக்ஸல்ஸ் உடன் கூடிய 6.78 இன்ச் FHD+ டிஸ்பிளே மற்றும் 120Hz ரெஃப்ரஷ் ரேட்டுடன் வழங்கப்பட்டுள்ளது. 360Hz வரை PWM dimming rate மற்றும் 1300 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் ஆகியவையும் வழங்கப்பட்டுள்ளது.
​பேட்டரிVivo V29e மொபைலின் நீடித்த செயல்பாட்டிற்காக இதில் 5000mAh திறன்மிக்க பேட்டரி மற்றும் 44W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. Android 13-based FuntouchOS 13 ஆப்பரேட்டிங் சிஸ்டம் அடிப்படையில் இயங்குகிறது.
​Vivo V29e மொபைலின் விலை மற்றும் நிறங்கள்Vivo V29e ஆர்டிஸ்டிக் ரெட் மற்றும் ஆர்டிஸ்டிக் ப்ளூ ஆகிய நிறங்களில் வெளியாக உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இதன் 8GB RAM + 128GB ஸ்டோரேஜ் வேரியண்ட் 26,999 ரூபாய்க்கும் , 8GB RAM + 256GB ஸ்டோரேஜ் வேரியண்ட் 28,999 ரூபாய்க்கும் விற்பனைக்கு வந்துள்ளது. செப்டம்பர் 7 முதல் இந்த மொபைல் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.