முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு எதிரான வழக்கை தாமாக முன்வந்து விசாரிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
2001ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டு வரை நடைபெற்ற அதிமுக ஆட்சியில் முதலமைச்சராகவும், வருவாய் துறை அமைச்சராகவும் இருந்த
பதவி வகித்தார். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு வருமானத்திற்கு அதிகமாக 1.72 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக
மீது வழக்கு தொடரப்பட்டது. அதாவது, ஓ.பன்னீர்செல்வம் தனது மனைவி விஜயலட்சுமி, மகன்கள் ரவீந்திரநாத், ஜெயபிரதீப், மகள் கவிதா பானு மற்றும் சகோதரர்கள் பெயரில் வருமானத்திற்கு அதிகமாக சொத்துகளை வாங்கியாக தேனி மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கு சிவகங்கை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், 2012ஆம் ஆண்டு ஓபிஎஸ் மீதான குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆவணங்கள் இல்லை எனவும் அதனால் வழக்கை தொடர்ந்து நடத்தவில்லை எனவும் புகாரை திரும்ப பெற்றுக் கொள்வதாகவும் லஞ்ச ஒழிப்புத் துறை அறிக்கை அளித்தது. இதனால் சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஓபிஎஸ் விடுவிக்கப்பட்டு இருந்தார்.
இந்த நிலையில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. இந்த வழக்கு நாளை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வரவுள்ளது.
முன்னதாக அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ஆகியோரை சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து கீழமை நீதிமன்றங்கள் விடுவித்தன. இவ்வழக்குகளை தாமாக முன்வந்து விசாரணை எடுத்தார் நீதிபதி ஆனந்த் வெங்கடேசன். , வழக்கு விசாரணையில் பின்பற்றப்பட்ட நடைமுறைகள் தவறானவையாக உள்ள என்றும், விடுவித்த உத்தரவுகள் ஒரே மாதிரி உள்ளன என்றும், இதனைப் பார்த்துக்கொண்டு நீதிமன்றம் சும்மா இருக்காது எனவும் நீதிபதி தெரிவித்தார்.
இதுதொடர்பாக திமுகவின் ஆர்.எஸ்.பாரதி, தாமாக முன்வந்து வழக்கு என்ற பெயரில் பழிவாங்கும் நோக்கில் செயல்பட கூடாது. திமுக அமைச்சர்கள் மீதான வழக்குகளை மீண்டும் விசாரிப்பது ஏன், இதுதொடர்பாக உச்சநீதிமன்றம் செல்வோம் என்று தெரிவித்திருந்தார். எனினும், ஆர்.எஸ்.பாரதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர மாட்டேன் என்று தெரிவித்த நீதிபதி, ஆர்.எஸ்.பாரதியின்பேட்டியை தானும் பார்த்ததாகவும், அதைப் பார்த்து நிலை தடுமாறினால் நீதிபதியாக இருக்கும் திறமையை இழந்தவனாகி விடுவேன் என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கையும் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளார் நீதிபதி ஆனந்த் வெங்கடேசன்.