சென்னை தமிழக அமைச்சர் மா சுப்பிரமணியன் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளார். இன்று அதிகாலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நடைப்பயிற்சி முடித்துவிட்டு பார்வையாளர்களைச் சந்திக்கும்போது, அவருக்குத் தலைச்சுற்றல் ஏற்பட்டது. உடனே மா.சுப்பிரமணியன் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவருக்குத் தேவையான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. அந்த பரிசோதனையின் அடிப்படையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழக அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அவருக்கு அங்கு மேற்கொள்ளப்பட்ட ஆஞ்சியோ பரிசோதனையில் எவ்வித […]