அரசு பள்ளி விடுமுறை நாட்கள்… 23ல் இருந்து வெறும் 11ஆக குறைந்தது… பகீர் கிளப்பிய பிகார்!

ஒவ்வொரு ஆண்டும் அரசு பள்ளி மாணவர்களுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை என்று கால அட்டவணை வெளியாகும். அதில் 25க்கும் மேற்பட்ட பொது விடுமுறை நாட்கள் இடம்பெற்றிருக்கும். இந்நிலையில் பிகார் மாநில அரசு பரபரப்பான உத்தரவை பிறப்பித்துள்ளது. இதையொட்டி வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், கல்வியாண்டில் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் பண்டிகை கால விடுமுறை நாட்களின் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது.

பள்ளி விடுமுறை நாட்கள்

முன்னதாக 23ஆக இருந்த நிலையில் இனிமேல் 11 நாட்கள் மட்டுமே விடுமுறை அளிக்கப்படும். இதன்மூலம் பிகார் மாநிலத்தின் கல்வித்துறையும், கல்வியின் தரமும் மேம்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிகார் மாநில அரசின் அறிவிப்பின் படி, ரக்‌ஷா பந்தன் நாளன்று விடுமுறை கிடையாது.

துர்கா பூஜை பண்டிகை

முன்னதாக 6 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு வந்த துர்கா பூஜை பண்டிகைக்கு இனிமேல் 3 நாட்கள் மட்டுமே விடுமுறை. தீபாவளி முதல் சாத் பண்டிகை வரை 9 நாட்கள் விடுமுறை விடப்படும். இனிமேல் தீபாவளி பண்டிகை அன்று ஒரே ஒரு நாள் மட்டுமே விடுமுறை எனக் கூறப்பட்டுள்ளது.

Google News Follow : கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மாணவர்கள் ஏமாற்றம்

சித்ரகுப்தா பூஜை அன்று ஒருநாள் விடுமுறை அளிக்கப்படும். சாத் பூஜையை ஒட்டி இரண்டு நாட்கள் விடுமுறை விடப்படும். இந்த புதிய அறிவிப்பால் மாணவ, மாணவிகள் பெரும் ஏமாற்றத்திற்கு ஆளாகியுள்ளனர். பிகார் மாநில கல்வித்துறை பிறப்பித்துள்ள அதிரடியான உத்தரவால், பள்ளிகள் இயங்கும் நாட்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

வேலை நாட்கள் எத்தனை

முன்னதாக அரசு அறிவுறுத்தலின் படி, தொடக்கப் பள்ளிகள் குறைந்தது 200 நாட்களும், நடுநிலைப் பள்ளிகள் குறைந்தது 220 நாட்களும் கட்டாயம் செயல்பட வேண்டும். ஆனால் தேர்வுகள், பண்டிகைகள், இயற்கை பேரிடர்கள் போன்றவற்றால் பள்ளிகள் போதிய நாட்கள் இயங்குவது இல்லை. மேலும் பண்டிகை கால விடுமுறை என்பது அனைத்து மாவட்டங்களிலும் ஒரே மாதிரியாக இருப்பது இல்லை.

Google News Follow : கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

புதிய உத்தரவு அமல்

வெவ்வேறு நாட்களில் விடுமுறையும், வெவ்வேறு நாட்களில் பள்ளிகள் திறப்பும் உள்ளது. இவை அனைத்தையும் மாற்றி ஒழுங்கு முறைப்படுத்தும் வகையில் புதிய உத்தரவு இருக்கும் என்று கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் முக்கியமான பண்டிகைகளின் போது விடுமுறை நாட்கள் குறைக்கப்பட்டது சர்ச்சையாக மாறியிருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.