ஆதித்யா எல்1 மிஷன்: அடுத்த ஆட்டத்துக்கு ரெடியான இஸ்ரோ… சூரியனுக்கு வச்ச குறி!

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ சமீபத்தில் நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 3 விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. இந்த திட்டம் வெற்றி பெற்ற நிலையில் தற்போது சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா என் 1 என்ற விண்கலத்தை விண்ணில் செலுத்தவுள்ளது.

பிஎஸ்எல்வி – சி 57 ராக்கெட்டில் செப்டம்பர் 2 தேதி காலை 11.50 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஆதித்யா எல்1 விண்கலம் விண்ணில் ஏவப்பட உள்ளது. இதற்கான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஆதித்யா எல் 1 மிஷன் குறித்து துவக்கத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

ஆதித்யா எல் 1 மிஷன் தொடர்பான உட்புற ஒத்திகைகள் அனைத்தும் முடிந்துள்ளதாகவும் இஸ்ரோ தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. ஆதித்யா எல்1 மிஷன் தான் சூரியன் தொடர்பான இஸ்ரோவின் முதல் ஆய்வு. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி – சி 57 ராக்கெட் மூலம் புறப்படும் ஆதித்யா எல் 1 மிஷன், நான்கு மாதங்கள் பயணம் செய்து தனது இலக்கை அடைய உள்ளது.

4 மாதங்களில் சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் பயணம் செய்யும் ஆதித்யா எல் 1 விண்கலம் சூரியன்-பூமி அமைப்பின் லாக்ராஞ்சியன் புள்ளி 1 (L1) சுற்றி ஒரு ஒளிவட்ட சுற்றுப்பாதையில் நிறுத்தப்படும். ஆதித்யா எல்1 சூரிய செயல்பாடுகள் மற்றும் விண்வெளி வானிலையில் அதன் தாக்கம், சூரியன் மற்றும் நட்சத்திரங்கள் குறித்து ஆய்வு செய்யவுள்ளது.

திருப்பதியில் தரிசனம் செய்ய சரியான நேரம்: கூட்டம் குறைந்தது… மளமளவென தரிசிக்கும் பக்தர்கள்!

சூரியனின் குரோமோஸ்பியர், கரோனா, பிளாஸ்மா இயற்பியல், சோல் ஃப்ளேர்ஸ் ஆகியவற்றைப் படிப்பதே இந்த திட்டத்தின் நோக்கம் என கூறப்படுகிறது. சூரியன் குறித்த ஆய்வு செய்யப்படும் இந்த ஆதித்யா எல்1 மிஷன் 423 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படுகிறது. சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றுள்ள நிலையில் ஆதித்யா எல்1 மிஷன் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.