இந்திய சந்தையில் விவோ வி29e ஸ்மார்ட்போன் அறிமுகம் | விலை, சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விவோ வி29e ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை சந்தையில் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் இப்போது இந்தியாவில் விவோ ‘வி’ சீரிஸ் போன்களில் வி29e மாடல் போனை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

வி29e சிறப்பு அம்சங்கள்

  • 6.78 இன்ச் ஃபுல் ஹெச்.டி+ டிஸ்ப்ளே
  • ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட்
  • ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம்
  • 8ஜிபி ரேம் + 128ஜிபி/256ஜிபி என் இரு வேறு ஸ்டோரேஜ் வேரியண்ட்
  • பின்பக்கத்தில் இரண்டு கேமரா. அதில் 64 மெகாபிக்சலை கொண்டுள்ளது பிரதான கேமரா
  • 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
  • 5,000mAh பேட்டரி
  • 44 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் திறன்
  • யுஎஸ்பி டைப் சி
  • 5ஜி நெட்வொர்க் இணைப்பு
  • 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ள போனின் விலை ரூ.26,999 மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ள போனின் விலை ரூ.28,999
  • வரும் 7-ம் தேதி இந்த போன் விற்பனை தொடங்குகிறது

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.