காஜியாபாத்,
உத்தர பிரதேசத்தில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியைஏற்படுத்தி உள்ளது.
உத்தர பிரதேசத்தில் காஜியாபாத் நீதிமன்ற வளாகத்தில் நேற்று மனோஜ் சவுத்ரி என்ற வழக்கறிஞர், தன் அறையில் மதிய உணவுசாப்பிட்டார்.
அப்போது, இரண்டு மர்ம நபர்கள் அவரது அறைக்குள் நுழைந்து அவரை சுட்டுவிட்டு தப்பியோடினர். இதில், அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
தகவலறிந்து வந்த போலீசார், அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், நீதிமன்ற வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து, தப்பியோடிய நபர்களை தேடி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement