ஃபிரண்ட்ஸ் படம் மூலம் பிரபலமான நடிகை விஜயலட்சுமி, தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். நாம் தமிழர் கட்சியினி தலைமை ஒருங்கிணைப்பாளரான
தன்னை திருமணம் செய்து ஏமாற்றியதாக கடந்த 2011 ஆம் ஆண்டு புகார் அளித்தார்.
அதன்பிறகு சீமான் குறித்து பல்வேறு புகார்களை கூறி வீடியோ வெளியிட்டு வருகிறார் விஜயலட்சுமி. மேலும் சீமானை கண்டப்படி திட்டி விஜயலட்சுமி வெளியிட்ட வீடியோக்கள் பெரும் வைரலானது. இந்நிலையில் நேற்று முன்தினம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மீண்டும் சீமான் மீது புகார் அளித்தார்.
அப்போது சீமானால் தான் இப்போது இந்த இடத்தில் நிற்பதாகவும், சீமானை கைது செய்யும் வரை தனது போராட்டம் தொடரும் என்றும் கூறினார். மேலும் சீமானின் அரை நிர்வாண வீடியோ தன்னிடம் உள்ளதாக கூறிய விஜயலட்சுமி, மதுரை செல்வம் தன்னை மிரட்டுவதாகவும் கூறினார்.
அதிமுக ஆட்சியில் சீமான் காப்பாற்றப்பட்டதாகவும், தற்போது போராடும் நிலைக்கு திமுக தங்களை விடாது என்றும் விஜயலட்சுமி தெரிவித்தார். இந்நிலையில் சீமானிடம் விஜயலட்சுமியின் புகார் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த சீமான், இதுவரை கேள்விகள் கேட்டீர்கள் இப்போது எதுக்கு கேவலத்தை கேட்கிறீர்கள், வேறு ஏதாவது இருந்தால் கேளுங்கள் என்றார்.
அதிமுக தான் சீமானை காப்பாற்றுகிறது – கீ.வீரலட்சுமி
மேலும் விஜயலட்சுமியின் புகாருக்கு அரசியல் பின்னணி காரணமாக இருக்குமா என்ற கேள்விக்கு பதில் அளித்த சீமான், இருக்கலாம் என்றார். தொடர்ந்து பேசிய சீமான் புகரா இருந்தா காவல்துறையினர் எடுப்பார்கள் பொய்யாக இருந்தால் எடுக்கமாட்டார்கள் என்றார். மேலும் இந்த விஷயத்தை தான் அமைதியாக கடந்து போக நினைப்பதாகவும் கூறினார்.
உலகம் முழுவதும் தனக்கு பல கோடி குடும்பங்கள் இருப்பதாக கூறிய சீமான், தனக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருப்பதாக கூறினார். அதை திரும்ப திரும்ப பேசிட்டு இருக்குறது ரொம்ப கேவலமா இருக்கு என்றும் இதில் தனக்கு ஒன்றும் இல்லை, ஆனால் தன்னை சார்ந்து இருப்பவர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்றும் ஆதங்கப்பட்டார். தான் பல வலிகளை அனுபவித்து வந்தவன் என்றும், என் இன சாவையே கண் முன் பார்த்தவன் என்றும் சீமான் தெரிவித்தார்.
கூகுள் செய்திகள் பக்கத்தில் Samayam Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. உடனுக்குடன் செய்திகளை பெறுங்கள்.