மதுரை: மதுரை மீனாட்சிஅம்மனை தரிசித்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கோடநாடு வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும், மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை என்றும் தெரிவித்தார். மறைந்த தமிழ்நாடு முதல்வர் “ஜெயலலிதாவின் முகாம் அலுவலகமாகவும், ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய இடமாகவும் இருந்து வந்த கோடநாடு எஸ்டேட்டில், அவரது மறைவுக்கு பிறகு 2017, ஏப்ரல் 24ஆம் தேதியன்று கொலை, கொள்ளை சம்பவம் அரங்கேறியது. இதில், அங்கிருந்த காவல்காரர் ஓம்பகதூர் என்பவர் கொலை செய்யப்பட்ட நிலையில், மற்றொரு காவலாளியான கிருஷ்ணபகதூர் என்பவர் […]