கடந்த 23 ஆம் தேதி மாலை விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது. அதனை தொடர்ந்து அன்று இரவே விக்ரம் லேண்டரில் இருந்த பிரக்யான் ரோவர் நிலவில் தரையிறங்கியது. தரையிறங்கியது முதலே நிலவின் தென் துருவ மேற்பரப்பில் தனது வேலையை தொடங்கிவிட்டது பிரக்யான் ரோவர்.
ஆய்வு பணிகளை மட்டும் மேற்கொள்ளாமல் தன்னையும் பாதுகாத்து கொள்கிறது. நிலவின் மேற்பரப்பில் பயணம் மேற்கொண்ட ரோவர், முன்னால் பெரிய பள்ளம் ஒன்று இருப்பதை பார்த்து தனது பாதையை பாதுகாப்பான வழியில் மாற்றியது.
திருப்பதியில் தரிசனம் செய்ய சரியான நேரம்: கூட்டம் குறைந்தது… மளமளவென தரிசிக்கும் பக்தர்கள்!
தொடர்ந்து நிலவின் வெப்ப நிலையை ஆய்வு செய்த ரோவர், நேற்று நிலவின் தென் துருவத்தில் சல்பர் இருப்பதை தனது லிப்ஸ் கருவி மூலம் ஆய்வு செய்து உறுதி செய்தது. மேலும் அலுமினியம், கால்சியம், இரும்பு, டைட்டானியம், மாங்கனீசு, சிலிக்கான், குரோமியம் மற்றும் ஆக்சிஜன்ஆகியவை இருப்பதையும் உறுதிப்படுத்தியது.
தொடர்ந்து நிலவில் தென் துருவத்தில் ஹைட்ரஜன் உள்ளதா என்பது குறித்த தேடுதல் வேட்டையை தொடங்கியுள்ளது ரோவர். இந்நிலையில் தரையிறங்கிய நாளில் இருந்து எதிர்பார்த்த போட்டோவை அனுப்பியுள்ளது ரோவர். அதாவது விக்ரம் லேண்டர் தரையிறங்கிய பிறகு அதில் இருந்து இறங்கும் ரோவர் விக்ரம் லேண்டரையும், விக்ரம் லேண்டர் ரோவரையும் போட்டோ எடுத்து அனுப்பும் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
நிலவில் இதெல்லாம் இருக்கா… அசர வைக்கும் ரோவர் ஆராய்ச்சி… ஆடிப்போன விஞ்ஞானிகள்!
இதனால் அந்த போட்டோவை காண மக்கள் ஆர்வமாக இருந்தனர். ஆனால் விக்ரம் லேண்டர் எடுத்த ரோவரின் வீடியோக்களை மட்டுமே இஸ்ரோ இதுவரை வெளியிட்டு வந்தது. இந்நிலையில் முதல் முறையாக ரோவர் தனது தாயாக கருதப்படும் லேண்டரை புகைப்படம் எடுத்துள்ளது. அந்த போட்டோவை இஸ்ரோ தற்போது வெளியிட்டுள்ளது.
மேலும், இன்று காலை விக்ரம் லேண்டரின் படத்தை பிரக்யான் ரோவர் கிளிக் செய்தது என்றும் ‘பயணத்தின் படம்’ ரோவரில் (NavCam) உள்ள நேவிகேஷன் கேமராவால் எடுக்கப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளது. சந்திரயான்-3 பணிக்கான நேவிகேஷன் கேமராக்கள் எலக்ட்ரோ-ஆப்டிக்ஸ் சிஸ்டம்களுக்கான ஆய்வகத்தால் (LEOS) உருவாக்கப்பட்டுள்ளன என்றும் இஸ்ரோ தனது டிவீட்டில் தெரிவித்துள்ளது.
கூகுள் செய்திகள் பக்கத்தில் Samayam Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. உடனுக்குடன் செய்திகளை பெறுங்கள்.