சுங்க கட்டணம் மீண்டும் உயர்வு: பாஜக அரசுக்கு எதிராக குரல் கொடுக்கும் பாமக, தேமுதிக

தமிழ்நாட்டில் உள்ள 55 சுங்கச்சாவடிகளில் 27 சுங்கச் சாவடிகளில் கடந்த ஏப்ரம் மாதம் கட்டணம் உயர்த்தப்பட்டது. மீதமுள்ள 28 சுங்கச் சாவடிகளில் நாளை நள்ளிரவு கட்டணம் உயர்கிறது.

விக்கிரவாண்டி, ஓமலூர், தருமபுரி, சமயபுரம் உள்ளிட்ட 28 சுங்கச் சாவடிகளில் நாளை நள்ளிரவு (செப்டம்பர் 1) முதல் சுங்க கட்டணம் குறைந்தது ரூ.5 முதல் அதிகபட்சமாக ரூ.150 வரை உயர்த்தப்படவுள்ளது.

நெடுஞ்சாலைகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை, சுங்கச் சாவடிகளில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக புகார்கள் வந்துள்ளன இந்த சூழலில் சுங்க கட்டணத்தை மட்டும் உயர்த்திக் கொண்டே செல்வதால் வாகன ஓட்டிகள் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளன.

சுங்க கட்டண உயர்வுக்கு எதிராக பாமக,

, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பாமக தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றிருந்தாலும், தேமுதிக அந்தக் கூட்டணியில் இணைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படும் நிலையிலும் பாஜக அரசை விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருப்பது கவனம் பெற்றுள்ளது.

அன்புமணி தனது ட்விட்டர் பதிவில், “சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் வசூலிப்பதில் எந்தவிதமான வெளிப்படைத்தன்மையும் இல்லை. சென்னையை அடுத்த செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் விதிகளுக்கு முரணாக ரூ.28 கோடி கூடுதல் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டிருப்பது இந்திய தலைமைக் கணக்காயரின் தணிக்கை அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

விஜயகாந்த் பிறந்தநாள் – மதுரை கோயில் தேமுதிக நிர்வாகிகள் சிறப்பு தரிசனம்

அதுமட்டுமின்றி, கடந்த ஐந்தாண்டுகளில் அந்த சுங்கச்சாவடியில் 2019 ஆகஸ்ட் முதல் 2020 ஜுன் வரை பயணித்த 1.17 கோடி ஊர்திகளில் 53% அதாவது 62.37 லட்சம் ஊர்திகள் மிக முக்கியமானவர்களின் ஊர்திகள் என்று அறியப்பட்டு அவற்றுக்கு கட்டண விலக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஒருபுறம் இதுபோன்ற தவறுகளும், முறைகேடுகளும் தொடர்வதை அனுமதித்து விட்டு, மறுபுறம் சுங்கக்கட்டணத்தை தொடர்ந்து உயர்த்துவது நியாயமற்றது” என்று கூறியுள்ளார்.

தேமுதிக தலைவர்

வெளியிட்ட அறிக்கையில், “விலைவாசி உயர்வால்‌, பொதுமக்கள்‌ வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும்‌ நிலையில்‌, சுங்கக்கட்டணத்தை உயர்த்தினால்‌ அத்தியாவசியப்‌ பொருட்களின்‌ விலை மேலும்‌ அதிகரிக்கும்‌ இதனால்‌ ஏழை எளிய, நடுத்தர மக்கள்‌ கடுமையாக பாதிக்கப்படுவார்கள்‌.

காலாவதியான சுங்க சாவடிகளில்‌ கட்டண வசூலை நிறுத்த வேண்டும்‌. சுங்க கட்டண உயர்வு தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெறவில்லை என்றால்‌, அனைத்து சுங்க சாவடிகளை முற்றுகையிட்டு தேமுதிக சார்பில்‌ மாபெரும்‌ கண்டன ஆர்ப்பாட்டம்‌ நடத்தப்படும்‌ என்று தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.