சூப்பர் ப்ளூ மூன்: இன்று வானில் தோன்றும் அதிசய நிகழ்வு… மிஸ் பண்ணிடாதீங்க!

சூப்பர் ப்ளூ மூன் (Super Blue Moon)… இந்த பெயரை கேட்டதும் நிலவு நீல நிறத்தில் தோன்றும் என நினைத்து விடாதீர்கள். அறிவியல் பூர்வமான ஒரு நிகழ்வின் சிறப்பு பெயர். சூப்பர் மூன் (Super Moon) என்றால் பூமியை நிலவு சுற்றி வரும் சுற்றுவட்டப் பாதை மிகவும் சிறியதாக இருக்கும். பூமியை நெருங்கி வரும் நேரத்தில் தோன்றும் நிலவை சூப்பர் மூன் என்று அழைப்பர். இந்த நேரத்தில் பூமியில் இருந்து நிலவை பார்ப்பதற்கு சற்றே பெரிதாக தென்படும்.

ப்ளூ மூன் நிகழ்வுப்ளூ மூன் (Blue Moon) என்பது ஒரே மாதத்தில் இரண்டாவதாக வரும் முழு நிலவு. அதாவது பவுர்ணமி. வழக்கமாக ஒரு மாதத்திற்கு ஒரு பவுர்ணமி மட்டுமே வரும். அறிவியல் கணக்குப்படி ஓராண்டில் எஞ்சியிருக்கும் 11 நாட்கள் ஒன்று சேர்ந்து ஒருகட்டத்தில் கூடுதலாக முழு நிலவு தென்படும். இதையே ப்ளூ மூன் என்று அழைப்பர்.அரிதான சூப்பர் ப்ளூ மூன்ப்ளூ மூன் சில அரிதான நேரங்களில் நீல நிறத்தில் காட்சியளிக்கக் கூடும். அதாவது, வளிமண்டல நிகழ்வுகளால் ஒளிச்சிதறல் ஏற்பட்டு நிலவு நீல நிறமாக தென்படும். இந்நிலையில் மேற்குறிப்பிட்ட சூப்பர் மூன் மற்றும் ப்ளூ மூன் ஆகியவை இரண்டும் ஒன்றாக நிகழும் போது சூப்பர் ப்ளூ மூன் என்றாகி விடுகிறது. இது வழக்கமான பவுர்ணமியை விட சற்றே அதிக வெளிச்சத்துடன் இருக்கும்.​Google News Follow : கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
​இந்தியாவில் எப்போது பார்க்கலாம்அறிவியல் பூர்வமாக பார்க்கையில் சராசரியாக 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சூப்பர் ப்ளூ மூன் தென்படும். இத்தகைய அரிய நிகழ்வு தான் இன்று இரவு (ஆகஸ்ட் 30) மற்றும் நாளை அதிகாலை (ஆகஸ்ட் 31) நடக்கவுள்ளது. இந்திய நேரப்படி இன்று இரவு 9.30 மணிக்கு அதிகபட்ச ஒளியுடன் ப்ளூ மூன் நிகழ்வு தொடங்கும். இது படிப்படியாக அதிகரித்து நாளை காலை 7.30 மணிக்கு உச்சம் தொடும்.
​வெப் டிவியில் பார்க்க ஏற்பாடுசூப்பர் ப்ளூ மூன் நிகழ்வில் நிலவை முழுமையாக பார்க்க வேண்டுமெனில் இன்று மாலை சூரியன் மறைவிற்கு பின்னர் பார்க்கலாம். அமெரிக்காவில் இரவு 8.37 மணிக்கு சூப்பர் ப்ளூ மூன் நிகழ்வை பார்க்கலாம். லண்டனில் இரவு 8.08 மணிக்கு பார்க்க முடியும். வானில் சரியாக பார்க்க முடியாதவர்கள் The Virtual Telescope Project என்ற வெப் டிவியின் மூலம் நேரலையில் பார்க்கலாம்.​Google News Follow : கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அடுத்த சூப்பர் ப்ளூ மூன்இந்த இணையதளத்தில் இந்திய நேரப்படி நாளை (ஆகஸ்ட் 31) காலை 9 மணி முதல் பார்க்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. சூப்பர் மூன் மற்றும் ப்ளூ மூன் நிகழ்வுகள் அவ்வப்போது வானில் தென்பட்டு கொண்டு தான் இருக்கும். ஆனால் சூப்பர் ப்ளூ மூன் என்பது மிகவும் அரிதான நிகழ்வு என வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அடுத்த சூப்பர் ப்ளூ மூன் 2037ஆம் ஆண்டு நிகழும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.