பணஜி: கோவாவில் ஆண்களை செக்ஸ் வலையில் சிக்கவைத்து, பின் மிரட்டி பணம் பறித்த இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவாவைச் சேர்ந்தவர் கிரண் படேல். சமீபத்தில், இவருடன் இரண்டு பெண்கள் நட்பாக பழகி, பின் அவரை செக்ஸ் வலையில் வீழ்த்தினர். இந்நிலையில், திடீரென ஒரு நாள் தங்களுக்கு 2 லட்சம் ரூபாய் அளிக்க வேண்டும் என்றும், இல்லை எனில், போலீசில் பாலியல் பலாத்கார புகார் அளித்துவிடுவோம் எனவும் மிரட்டினர். இதையடுத்து கிரண் படேல் அளித்த புகாரின்படி, இரண்டு பெண்களையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது, இவர்கள் இருவரும் குஜராத்தைச் சேர்ந்தவர்கள் என்பதையும், ஏற்கனவே வேறு நபர்கள் மீது மூன்று பாலியல் பலாத்கார புகார்கள் அளித்திருப்பதையும் கோவா போலீசார் கண்டறிந்தனர். இதையடுத்து, குஜராத் போலீசாரிடம் இவர்கள் குறித்து தகவல் சேகரித்தபோது, இதேபோல் அங்கும் இரண்டு புகார்கள் அளித்திருப்பதை உறுதி செய்தனர்.
இவை அனைத்தும் தங்களின் செக்ஸ் வலையில் வீழ்ந்த ஆண்களை மிரட்டி, பணத்தை பறிக்கும் நோக்கத்தில் அளிக்கப்பட்டவை என விசாரணையில் தெரியவந்தது. இதில், இவர்களுக்கு உடந்தையாக குஜராத்தின் பாவ்நகரைச் சேர்ந்த விஷ்வதீப் கோஹில் என்பவர் செயல்பட்டதையும் கண்டறிந்து, அவரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement