தங்கம், வைரத்தை பூமியில் புதைத்து வைத்திருக்கும் சீமான்.. பகீர் புகாருடன் வந்த விஜயலட்சுமி

சென்னை:
வெளிநாடுகளில் இருந்து வந்த தங்கம், வைரப் பொருட்களை சீமான் பூமிக்குள் புதைத்து வைத்திருப்பதாக நடிகை விஜயலட்சுமி அதிரடியாக தெரிவித்துள்ளார். மேலும், அவர் அதை எங்கே புதைத்து வைத்துள்ளார் என்பதையும் கூறியுள்ள விஜயலட்சுமி, இதுதொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும் ஒரு கோரிக்கையை வைத்துள்ளார்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும், முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகள் கயல்விழிக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. இதனிடையே, இந்த திருமணத்திற்கு முன்பே தன்னை சீமான் திருமணம் செய்ததாக நடிகை விஜயலட்சுமி கூறி வருகிறார். இதுதொடர்பாக அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டு வரும் விஜயலட்சுமி, அதில் சீமானை மிகவும் இழிவாக பேசுவார்.

ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக சீமான் பெரிய அளவில் விளக்கங்களை கூறியது கிடையாது. இந்த சூழலில், நேற்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு தமிழர் முன்னேற்றப் படையின் தலைவர் வீரலட்சுமியுடன் வந்த விஜயலட்சுமி சீமான் மீது புகார் அளித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை அவர் சந்தித்த போது, சீமான் உங்களை திருமணம் செய்ததற்கான ஆதாரங்கள் இருக்கிறதா? என கேள்வி கேட்ட நிருபரை தரக்குறைவாக பேசினார் விஜயலட்சுமி. இந்த விவகாரம் தொடர்பாக சீமான் கூறுகையில், “கேவலத்தை பற்றி பேச விரும்பவில்லை” என்றார்.

இந்நிலையில், தற்போது புதிய குற்றச்சாட்டுடன் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் விஜயலட்சுமி. அதில் விஜயலட்சுமியும், வீரலட்சுமியும் பேசுகின்றனர். வீரலட்சுமி கூறுகையில், “சீமான் அவர்கள் கேவலத்தை பற்றி எல்லாம் நான் பேச மாட்டேன் என சொன்னாரு. அவரு ஒரு பத்து வருஷத்துக்கு முன்னாடி 20 ஆயிரம் ரூபாய்க்கும், 10 ஆயிரம் ரூபாய்க்கும் எங்க அக்கா விஜயலட்சுமி காலடியில் கிடப்பாராம். அக்கா இப்போ ஒரு அதிர்ச்சி தகவலை என்கிட்ட சொன்னாங்க.

சுவிட்சர்லாந்து, ஜெனிவா நாடுகளில் இருந்து மதுரை கார்த்திக் என்பவர் மூலமாக வைர வாட்ச், தங்க ஆபரணங்கள், வைரக்கல் பதிக்கப்பட்ட ஆபரணங்கள் எல்லாம் சுவிட்சர்லாந்து, ஜெனீவாவில் இருந்து சீமானுக்கு வருமாம். அந்த நகைகளை இரவு போட்டு பார்த்துட்டு அடுத்த நாள் அவரது தாயாரின் சொந்த ஊரான இளையான்குடிக்கு சென்று கொடுத்துருவாராம். அவரது தாயார் அந்த நகைகளை பூமிக்கு அடியில் புதைத்து விடுவார்களாம். அப்பவே அந்த நகைகளின் மதிப்பு பல லட்சங்கள் இருந்திருக்கின்றன. அப்படினா, இப்போ வரைக்கும் அவருக்கு அங்கே இருந்து நகைகள் வந்து கொண்டிருக்கின்றன என்றால் அவரிடம் எவ்வளவு நகைகள் இருக்கும் என கணக்கு போட்டு பாருங்கள். இவ்வாறு வீரலட்சுமி கூறினார்.

பின்னர் நடிகை விஜயலட்சுமி கூறுகையில், “சீமான் பெரிய தங்க செயின் போட்டிருக்கும் வீடியோவை உங்களுக்கு நான் காட்டியுள்ளேன். அந்த நகையின் மதிப்பு 12 வருஷத்துக்கு முன்னாடியே 20 லட்சம் ரூபாய் இருக்கும். இப்படி பல நகைகள் அவர்கிட்ட இருக்கு. இதை எல்லாம் வெச்சிகிட்டு தான் எனக்கு வாடகை கட்டவே காசில்லை என சீமான் நடிக்கிறார். முதல்வர் ஸ்டாலின் சார், கொஞ்சம் தயவு காட்டுங்க. சீமான் வீட்டில் வருமான வரி ரெய்டு நடத்த சொல்லுங்க” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.