ராய்ப்பூர்: சகோதரத்துவத்தை போற்றும் ரக் ஷா பந்தன் தினத்தில், சத்தீஸ்கரைச் சேர்ந்த பெண் ஒருவர், தன் தம்பிக்காக சிறுநீரகத்தை தானமாக வழங்க முன்வந்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரைச் சேர்ந்தவர் ஷீலாபாய் பால். இவரது தம்பி ஓம்பிரகாஷ்
தங்கர், 48. இவர், 2022 மே மாதம் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டார்.
இதையடுத்து, குஜராத் மாநிலம் நாடியாட்டில் உள்ள மருத்துவமனை ஒன்றில், ஓம்பிரகாஷ் தங்கருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள, அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர்.
அவர்களிடம், ‘சிறுநீரகம் தானம் செய்பவர் தேவை’ என, டாக்டர்கள் தெரிவித்தனர். இந்தத் தகவலை கேட்ட ஓம்பிரகாஷ் தங்கரின் அக்கா ஷீலாபாய் பால், உடனடியாக தன் சிறுநீரகத்தை தானமாக வழங்க முன்வந்தார்.
இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில், ஷீலாபாய் பாலின் சிறுநீரகம் ஓம்பிரகாசுக்கு பொருத்தமாக இருப்பது தெரிய வந்தது. சகோதரத்துவத்தை போற்றும் ரக் ஷா பந்தன் தினத்தை, தன் சகோதரர் ஓம் பிரகாஷ் உடன், நேற்று கொண்டாடிய ஷீலாபாய் பால், ”என் தம்பி நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்பதற்காக, சிறுநீரகத்தை தானமாக வழங்க முடிவு செய்தேன்,” என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement