மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடல் நலனில் மிகுந்த அக்கறை காட்டுபவர். மாரத்தான் ஓடுவதில் பெரும் விருப்பம் கொண்டவர்.
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் ஆய்வு செய்து வரும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் எந்த ஊருக்கு சென்றாலும் காலை நடை பயிற்சிக்கு சென்றுவிடுவார். உடல் நலனில் அக்கறை செலுத்துமாறு தொடர்ந்து விழிப்புணர்வும் ஏற்படுத்துவார்.
இன்று காலை அவர் தனது வீட்டில் பார்வையாளர்களை சந்தித்துக் கொண்டிருந்த போது மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனே சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பின்பு சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு ஆஞ்சியோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.