திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் கூட்டம் கணிசமாக குறைந்துள்ளதால் தரிசனத்திற்கான காத்திருப்பு நேரம் குறைந்துள்ளது.
பவித்ர உற்சவம் நிறைவுதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த மூன்று நாட்களாக பவித்ர உற்சவம் நடைபெற்று வந்தது. கோவில் பணியாளர்கள் மற்றும் பக்தர்களால் ஏற்படும் தோஷத்தை நிவர்த்தி செய்யும் வகையில் இந்த பவித்ர உற்சவம் நடைபெறுகிறது. யாகசாலை பூஜைகளுடன் பவித்ர உற்சவம் நேற்றுடன் நிறைவடைந்தது.கூட்டம் குறைந்ததுபவித்ர உற்சவத்திற்காக ஆர்ஜித சேவைகள் கடந்த 3 நாட்களாக ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் இன்று முதல் ஆர்ஜித சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வார நாட்கள் என்பதால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கூட்டம் சற்று குறைந்து காணப்படுகிறது.
நிரம்பி வழிந்த வைகுந்தம் காம்ப்ளக்ஸ்நேற்று முன்தினம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. டோக்கன் இல்லாத இலவச சர்வ தரிசனம் செய்ய பக்தர்கள் 18 மணிநேரம் காத்திருந்தனர். இலவச தரிசனத்துக்காக பக்தர்கள் காத்திருக்கும் வைகுந்தம் காம்ப்பிளக்ஸின் 25 பெட்டிகள் நிரம்பி வழிந்தன.7 மணிநேரத்தில் தரிசனம்நேற்று முன்தினம் 68,263 பக்தர்கள் சாமி தரிசனம் செய்த நிலையில் நேற்று பக்தர்களின் எண்ணிக்கை 64214 ஆக குறைந்தது. வெறும் 7 மணி நேரத்திலேயே பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதாக தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஓணம் புடவையில் கீர்த்தி சுரேஷ்… அசந்துபோன நெட்டிசன்ஸ்… திணறும் இன்ஸ்டா!15 பெட்டிகள்வைகுந்தம் காம்ப்ளக்ஸில் 15 கம்பார்ட்மெண்டுகளில் பக்தர்கள் தரிசனத்துக்காக காத்திருக்கின்றனர்.
பக்தர்களின் கூட்டம் குறைந்துள்ளதால் தரிசனத்திற்கான காத்திருப்பு நேரம் குறைந்து பக்தர்கள் விரைவாக சாமி தரிசனம் செய்து வருகின்றனர். காத்திருப்பு நேரம் குறைந்துள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகம் முழுக்க இடி மழை வெளுக்க போகுது… தமிழ்நாடு வெதர்மேன் வார்னிங்!நடைபாதையில் இரும்புவேலிநேற்று 25777 முடி காணிக்கை செலுத்தினர். உண்டியல் காணிக்கையாக 4.05 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. இதனிடையே திருப்பதி மலைப்பாதைகளில் ஒன்றான அலிபிரி மெட்டிலிருந்து திருமலை செல்லும் நடைபாதையில் இரும்பு வேலி அமைக்க கோரிய மனு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
நிலவில் இதெல்லாம் இருக்கா… அசர வைக்கும் ரோவர் ஆராய்ச்சி… ஆடிப்போன விஞ்ஞானிகள்!அறங்காவலர் குழு உறுப்பினர்கள்இதேபோல் திருப்பதி ஏழுமலையான் கோவில் அறங்காவலர் குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களில் குற்றப்பின்னணி கொண்டவர்களை நீக்க கோரியும் ஆந்திர உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கும் இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேவலத்தை கேட்குறீங்க… கேவலமா இருக்கு… விஜயலட்சுமி குறித்த கேள்விக்கு சீமானின் பதில்!எதிர்க்கட்சிகள் கண்டனம்திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில் இடம்பெற்றுள்ள கேதன் தேசாய் மற்றும் சரத் சந்திர ரெட்டி ஆகியோர் ஊழல் வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டவர்கள். அவர்களை அறங்காவலர் குழு உறுப்பினர்களாக முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நியமித்ததற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
விஜயவாடா மக்கள் கனவு நிஜமாகிறது: 6.5 கி.மீ நீள மேம்பாலம் – ஒரே ஆர்டரில் குறையும் டிராஃபிக்!