நடிகர் சிம்புவுக்கு புது சிக்கல்: வேல்ஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

‘மாநாடு’ படத்தின் தரமான கம்பேக்கிற்கு பிறகு தரமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் சிம்பு. தொடர்ச்சியாக மூன்று ஹாட்ரிக் வெற்றிகளை கொடுத்ததை தொடர்ந்து உலக நாயகனின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவன தயாரிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் நடிக்க கமிட் ஆனார் சிம்பு. இந்நிலையில் அவருக்கு எதிராக வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தொடங்கிய வழக்கில் நீதிமன்றம் அதிரடின் உத்தரவிட்டுள்ளது.

‘மாநாடு’ படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது ஆஸ்தான இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் நடித்தார் சிம்பு. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்த இந்தப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்தப்படத்தை தொடர்ந்து வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பில் இன்னொரு படத்தில் நடிப்பதாகவும் ஒப்புக்கொண்டு இருந்தார் சிம்பு.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

அதன்படி இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா உள்ளிட்ட படங்களை இயக்கிய கோகுல் இயக்கத்தில் ‘கொரோனா குமார்’ என்ற படத்தில் நடிக்கவிருந்தார் சிம்பு. ஆனால் சில காரணங்களால் அந்தப்படம் துவங்கப்படவில்லை. இதனிடையில் தான் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ‘எஸ்டிஆர் 48’ படத்தில் நடிக்க கமிட் ஆனார் சிம்பு.

இதனையடுத்து வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சிம்பு தங்களுக்கு படம் பண்ணி கொடுக்காமல் வேறு நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கக்கூடாது என போர்க்கொடி தூக்கியது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் வழக்கு ஒன்று தொடுத்திருந்தது.

Simbu: ‘எஸ் டி ஆர் 48’ படத்திற்காக சிம்பு செய்யப்போகும் காரியம்: இதை சத்தியமா எதிர்பார்க்கல..!

அதில், கொரோனா குமார் என்ற படத்தில் நடிப்பதாக ஒப்பந்தம் செய்து ரூ. 4.50 கோடி கொடுத்த நிலையில் சிம்பு அந்தப்படத்தை முடித்துக்கொடுக்கவில்லை என புகார் அளிக்கப்பட்டிருந்தது. கடந்த சில மாதங்களாக நடந்து வந்த இந்த வழக்கில் ஐகோர்ட் தற்போது அதிரடி உத்தரவு ஒன்று பிறப்பித்துள்ளது.

அதன்படி வேல்ஸ் பட நிறுவனம் தொடர்ந்த வழக்கில் ரூபாய். 1 கோடிக்கான உத்திரவாதத்தை நடிகர் சிம்பு செலுத்த வேண்டும் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது. இதனையடுத்து ‘எஸ்டிஆர் 48’ படம் எப்போது துவங்கும் என்பதிலும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

STR 48: படப்பிடிப்பே இன்னும் துவங்கல.. சிக்கலில் மாட்டிய சிம்பு – கமல் படம்..!

உலக நாயகனின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘எஸ்டிஆர் 48’ படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். இவர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகி ஹிட்டடித்த ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தை இயக்கியவர். இவரின் இரண்டாவது படைப்பாக உருவாகவுள்ள ‘எஸ்டிஆர் 48’ படத்தில் வரலாற்று சம்பந்தப்பட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப்படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.