நிலவில் இதெல்லாம் இருக்கா… அசர வைக்கும் ரோவர் ஆராய்ச்சி… ஆடிப்போன விஞ்ஞானிகள்!

நிலவின் தென் துருவத்தில் ஆக்ஸிஜன் உட்பட பல்வேறு முக்கிய தனிமங்கள் இருப்பது ரோவரின் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

​இஸ்ரோ டிவீட்​​சந்திரயான் 3இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ கடந்த மாதம் 14ஆம் தேதி நிலவுக்கு அனுப்பிய சந்திரயான் 3 விண்கலம் கடந்த 23 ஆம் தேதி நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது. முதலில் சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரும் பின்னர் பிரக்யான் ரோவரும் தரையிறங்கியது.​ தமிழகம் முழுக்க இடி மழை வெளுக்க போகுது… தமிழ்நாடு வெதர்மேன் வார்னிங்!​
நிலவின் தென்துருவத்தில் ஆய்வு
இதன் மூலம் அமெரிக்கா, ரஷ்யா, சீனா நாடுகளை தொடர்ந்து நிலவில் தடம் பதித்த 4வது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது. மேலும் நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்த முதல் நாடு என்ற பெருமையையும் சொந்தமாக்கியது இந்தியா. ரோவர் தொடர்ந்து நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்து வருகிறது.
ரோவர் கண்டுபிடிப்புவிக்ரம் லேண்டர் மற்றும் ரோவர் செயல்பாடு தொடர்பான தகவல்களை விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ வெளியிட்ட வண்ணம் உள்ளது. இந்நிலையில் ரோவரின் ஆய்வு குறித்து தகவலால் விஞ்ஞானிகள் பிரமித்து போயுள்ளனர். உலக நாடுகளும் ஆடிப்போயுள்ளன.
​ 3 குழந்தைகளின் தாய் சடலமாக மீட்பு… பலாத்காரம் செய்து கொன்றது அம்பலம்… ஆளுநர் அதிரடி உத்தரவு!​நிலவில் சல்ஃபர்அதாவது ரோவரில் உள்ள LIBS கருவி மூலம், நிலவின் மேற்பரப்பில் சல்ஃபர் உள்ளிட்ட பல்வேறு தனிமங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்ட அறிவிப்பில், ரோவரில் உள்ள லிப்ஸ் (Laser-Induced Breakdown Spectroscope-LIBS) ஆய்வுக் கருவியின் மூலம் தென்துருவத்துக்கு அருகே உள்ள நிலவின் மேற்பரப்பில் சல்ஃபர் அதாவது கந்தகம் தனிமம் இருப்பது சந்தேகத்திற்கு இடமின்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.
ஹைட்ரஜன் உள்ளதா?இதேபோல் அலுமினியம், கால்சியம், இரும்பு, டைட்டானியம், மாங்கனீசு, சிலிக்கான், குரோமியம் மற்றும் ஆக்சிஜன் மூலக்கூறுகள் இருப்பதும் ரோவரின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக இஸ்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து நிலவின் தென் துருவத்தில் ஹைட்ரஜனைக் கண்டறியும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.​ ஓணம் புடவையில் கீர்த்தி சுரேஷ்… அசந்துபோன நெட்டிசன்ஸ்… திணறும் இன்ஸ்டா!​
பெங்களூருLIBS கருவி பெங்களூருவில் உள்ள எலக்ட்ரோ-ஆப்டிக்ஸ் சிஸ்டம்ஸ் (LEOS)/ISRO ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்த ஆய்வு குறித்த கிராஃப் படத்தையும் இஸ்ரோ வெளியிட்டுள்ளது. பிரக்யான் ரோவரின் இந்த கண்டுபிடிப்புகள் உலக நாடுகளை வியப்படைய செய்துள்ளது.​ திருப்பதியில் மீண்டும் தொடங்கும் சேவைகள்… அலைமோதும் கூட்டம்… நிரம்பி வழியும் வைகுந்தம் காம்ப்ளக்ஸ்!​

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.