வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் இரண்டு ஹிந்து வியாபாரிகள் கொள்ளைக்காரர்களால் கடத்தப்பட்டனர். அவர்களை மர்ம கும்பல் அடித்து துனபுறுத்தும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சில தினங்களுக்கு முன் பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் ஹிந்துக்கள் இரண்டு ஹிந்து வியாபாரிகள் கொள்ளைக்காரர்களால் கடத்தப்பட்டனர். இதில் 25 வயதான சாகர் குமார் மற்றும் 65 வயதான ஜெகதீஷ் குமார் ஆகியோரை விடுவிக்க குடும்பத்தினரிடம் கொள்ளைக்காரர்கள் ரூ.10 லட்சம் கேட்டு போன் செய்ததாக கேட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்தப்பட்ட ஹிந்து வியாபாரிகள் சிறைப்பிடிக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படும் இரண்டு வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்களை அடிக்க வேண்டாம் என்று இருவரும் கெஞ்சும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தானில் ஹிந்துக்களுக்கு எதிராக இது போன்ற குற்றங்கள் அடிக்கடி நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement