திருப்பூர் மாவட்டம், நஞ்சப்பா நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் வானதி. இவர் பெருமாநல்லூரிலிருந்து திருப்பூருக்குச் செல்லும் அரசுப் பேருந்தில் போயம்பாளையம் பகுதிக்கு வந்து கொண்டிருந்தார். அந்தப் பேருந்து பாண்டியன் நகர் அருகே வந்தபோது, வானதியின் அருகில் நின்றுகொண்டிருந்த இரண்டு பெண்கள், வானதியின் கைப்பையிலிருந்த பணத்தைத் திருட முயன்றுள்ளனர்.
இதைக் கண்ட வானதி சத்தம் போடவே, பேருந்தில் பயணித்த சக பயணிகள் இரண்டு பெண்களையும் பிடித்து, பாண்டியன் நகர் சோதனைச்சாவடியில் உள்ள போலீஸாரிடம் ஒப்படைத்தனர். சோதனைச்சாவடியில் இருந்த பெண் போலீஸார், அந்தப் பெண்கள் வைத்திருந்த கைப்பைகளைச் சோதனையிட்டபோது, அதில் கட்டுக்கட்டாகப் பணம் மற்றும் 5 செல்போன்கள் இருந்தது தெரியவந்தது. அந்தப் பெண்கள் இருவரையும், திருமுருகன்பூண்டி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
இதில், அவர்கள் இருவரும் மதுரை வண்டியூர் பகுதியைச் சேர்ந்த உஷா (53), மஞ்சு (45) என்பது தெரியவந்தது. மேலும், இருவரும் வானதியிடம் பணத்தை திருட முயன்றதை ஒப்புக் கொண்டனர். இருவர்மீதும் ஏற்கெனவே பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைதுசெய்து நல்லூரில் உள்ள மகளிர் சிறையில் அடைத்தனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY