மூன்றாவது பாடல் வெளியீடு : ஜவான் படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
அட்லி இயக்கத்தில் நடிகர் ஷாரூக்கான் இரட்டை நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜவான்'. தீபிகா படுகோன், நயன்தாரா, பிரியாமணி , விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். அனிரூத் இசையமைக்கும் இந்த படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. வருகின்ற செப்டம்பர் 7ம் தேதி அன்று உலகமெங்கும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. ஏற்கனவே படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றன. இரண்டு பாடல்கள் வெளியாகி உள்ளன. இன்று இந்த படத்தில் இருந்து வெளிவந்த 'நாட் ராமையா வஸ்தாவயா' மூன்றாவது வீடியோ பாடலும் வெளியாகி உள்ளது. அதன் உடன் இணைத்து ஜவான் டிரைலர் வருகின்ற ஆகஸ்ட் 31ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளனர்.