சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு சென்றார். அங்கிருக்கும் ராகவேந்திரா சாமி கோவிலில் பிரார்த்தனை செய்தார். அவர் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது.
முன்னதாக பெங்களூருவில் இருக்கும் பஸ் டிப்போவுக்கு சென்று அங்கிருக்கும் டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் ரஜினி.
Actor Vijay son Jason sanjay : நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராகிறார்!
பெங்களூரில் பஸ் கண்டக்டராக தன் கெரியரை துவங்கியவர் ரஜினி. என்ன தான் பெரிய சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் பழசை மறக்காதவர் அவர். சும்மா பேச்சுக்காக மட்டும் தான் கண்டக்ராக இருந்தது பற்றி பேசுபவர் அல்ல என்பதை அவர் நிரூபித்துவிட்டார்.
கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்
கெரியரை பொறுத்தவரை பாக்ஸ் ஆபீஸ் கிங் என்பதை மீண்டும் நிரூபித்துவிட்டார் ரஜினி. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், வசந்த் ரவி, விநாயகன், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, மோகன்லால், சிவராஜ்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் உலக அளவில் இதுவரை ரூ. 600 கோடி வசூல் செய்திருக்கிறது.
3வது வாரத்திலும் கெத்து காட்டும் ஜெயிலர்: இந்தியாவில் மட்டும் ரூ. 350 கோடியை நெருங்கும் ரஜினி படம்
ஜெயிலர் படம் ரிலீஸாகி 20 நாட்களாகிவிட்டபோதிலும் தினமும் கோடிக் கணக்கில் வசூல் செய்து கொண்டிருக்கிறது. ஜெயிலருக்கு பிறகு புதுப் படங்கள் வந்தும் ரஜினியை பார்க்கும் ஆவல் ரசிகர்களுக்கு கொஞ்சம் கூட குறையவில்லை.
ஜெயிலர் படம் இதுவரை இந்தியாவில் மட்டும் ரூ. 322 கோடி வசூல் செய்திருக்கிறது. விரைவில் ரூ. 350 கோடியை தொட்டுவிடும் என்று நம்பப்படுகிறது. ஜெயிலரை தமிழகம் தவிர்த்து கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களிலும் கொண்டாடுகிறார்கள்.
ஜெயிலர் ரிலீஸான மறுநாளே மெகாஸ்டார் சிரஞ்சீவியின் போலா ஷங்கர் படம் ரிலீஸானது. போலா ஷங்கரால் தெலுங்கானா, ஆந்திராவில் ஜெயிலர் வசூல் பாதிக்கப்படுமோ என அஞ்சப்பட்டது. ஆனால் போலா ஷங்கரால் ஜெயிலருக்கு துளி கூட பாதிப்பு இல்லை.
கூகுள் செய்திகள் பக்கத்தில் Samayam Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. உடனுக்குடன் செய்திகளை பெறுங்கள்
போலா ஷங்கர் வந்தும் கூட ஜெயிலரை பார்க்கத் தான் அக்கட தேசத்து ரசிகர்கள் தியேட்டர்களுக்கு சென்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயிலர் படத்தின் இமாலய வெற்றியால் ரஜினியின் அடுத்த படமான தலைவர் 170 மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. சூர்யாவை வைத்து ஜெய்பீம் வெற்றிப் படத்தை கொடுத்த ஞானவேல் தான் தலைவர் 170 படத்தை இயக்குகிறார்.
செப்டம்பர் மாதம் மூன்றாவது வாரம் படப்பிடிப்பை துவங்குகிறார் ஞானவேல். தலைவர் 170 படத்தில் புது லுக்கில் வருகிறாராம் ரஜினிகாந்த்.
ஜெயிலர் பற்றி அந்த வார்த்தை சொன்ன விஜய்: அந்த மனுஷனுக்கு பெரிய மனசுய்யா
72 வயதிலும் ரஜினி இப்படி ஓய்வில்லாமல் உழைப்பதை பார்த்து ரசிகர்கள் சந்தோஷப்படுகிறார்கள். எந்த நடிகர் 72 வயதிலும் தொடர்ந்து ஹீரோவாக நடிக்கிறார், மேலும் பாக்ஸ் ஆபீஸில் புதுப் புது சாதனைகள் படைக்கிறார்?. அதெல்லாம் எங்கள் தலைவரால் மட்டுமே முடியும். அதனால் தான் அவர் என்றுமே சூப்பர் ஸ்டார் என்கிறார்கள் ரஜினி ரசிகர்கள்.
ராகவேந்திரா சாமியின் ஆசியுடன் தலைவர் 170 பட வேலையை துவங்கவிருக்கிறார் ரஜினி. ஜெயிலரை போன்றே தலைவர் 170 படமும் வசூலில் புது சாதனைகள் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.