லியோ படத்திற்கு 17 தீம் மியூசிக் கம்போஸ் செய்த அனிருத்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் லியோ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்டப்பணி நடைபெற்று வருகிறது. இப்படத்தின் இசை விழா சென்னையில் நடைபெற இருப்பதாகவும், அந்த விழாவில் கமல்ஹாசன், விக்ரம், தனுஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. லியோ படத்திற்காக 17 தீம் மியூசிக் டிராக்குகளை கம்போஸ் செய்து கொடுத்திருக்கிறாராம் அனிருத்.
இந்த ட்ராக் மியூசிக் அனைத்தும் படத்தில் ஆங்காங்கே முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகளின் பின்னணியில் ஒலிக்கும் என்று கூறும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் போது வெளியான பிளடி ஸ்வீட் ப்ரோமோ வீடியோவில் உள்ள காட்சிகளும் இந்த படத்தில் இடம் பெறுகிறது. படம் பார்க்கும்போது ரசிகர்களால் அந்த காட்சிகளையும், அந்த பீலையும் உணர முடியும் .
தற்போது லியோ படத்தின் கதை குறித்து சில தகவல்கள் சோசியல் மீடியாவில் பரவிக்கொண்டிருக்கிறது. ஆனால் இப்படத்தின் கதைக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அந்த அளவுக்கு யாரும் எதிர்பார்க்காத ஒரு வித்தியாசமான மாறுபட்ட கதையில் லியோ படம் உருவாகி இருக்கிறது என்றும் தெரிவித்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.