3வது வாரத்திலும் கெத்து காட்டும் ஜெயிலர்: இந்தியாவில் மட்டும் ரூ. 350 கோடியை நெருங்கும் ரஜினி படம்

Jailer Blockbuster: ஜெயிலர் படம் இந்தியாவில் மட்டும் ரூ. 350 கோடியை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதுவரை இந்தியாவில் ரூ. 320 கோடி வசூல் செய்துள்ளது.

​ஜெயிலர்​நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் டைகர் முத்துவேல் பாண்டியனாக ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்திக் கொண்டிருக்கிறது. படம் ரிலீஸாகி 20 நாட்களாகியும் ஜெயிலர் படம் தொடர்ந்து நல்ல வசூல் செய்து கொண்டிருக்கிறது. நேற்று இந்தியாவில் மட்டும் ரூ. 3.29 கோடி வசூலித்திருக்கிறது.

​அடங்கமறுக்கும் ஜெயிலர்: 17வது நாளில் இந்தியாவில் மட்டும் இத்தனை கோடியா!ஜேசன் சஞ்சய்​Actor Vijay son Jason sanjay : நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராகிறார்!​​இந்தியா​ஜெயிலர் படம் இதுவரை இந்தியாவில் மட்டும் ரூ. 322.65 கோடி வசூல் செய்திருக்கிறது. விரைவில் ரூ. 350 கோடியை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் அதிகம் வசூல் செய்த தமிழ் படமாக மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் இருந்தது. அந்த சாதனையை ஜெயிலர் முறியடித்துவிட்டது. மேலும் இந்தியாவில் மட்டும் ரூ. 320 கோடி வசூல் செய்த முதல் தமிழ் படம் ஜெயிலர் தான்.

​அந்த சாதனையையும் செய்த ஜெயிலர்

​ரூ. 600 கோடி​ஜெயிலர் படம் உலக அளவில் ரூ. 600 கோடி வசூல் செய்திருக்கிறது. ஜெயிலருக்கு பிறகு புதுப் படங்கள் ரிலீஸாகியிருந்தாலும் ரஜினியின் படம் ஓடும் தியேட்டர்களில் கூட்டம் இருக்கிறது. ஜெயிலர் படம் இந்த அளவுக்கு வெற்றி பெற்றதற்கு ரஜினியின் பவர் தான் காரணம் என்றார் நெல்சன் திலீப்குமார். அது உண்மை என்பது தியேட்டர்களை பார்க்கும்போது புரிகிறது.

​ரஜினியின் பவர் தான் ஜெயிலர் வெற்றிக்கு காரணம் : நெல்சன்​
​ரஜினி​ஜெயிலர் படம் ரிலீஸானபோது இமயமலை பயணத்தில் இருந்தார் ரஜினிகாந்த். தான் இமயமலைக்கு வந்ததற்கும், ஜெயிலர் படம் பிளாக்பஸ்டர் ஆனதற்கும் தொடர்பு இருப்பதாக ரஜினிகாந்த் தன் நட்பு வட்டாரத்திடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சென்னை திரும்பிய அவர் பெங்களூருக்கு சென்றார். அங்கு இருக்கும் ராகவேந்திரா சாமி கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்திருக்கிறார்.
​தலைவர் 170​ஜெயிலர் படத்தை அடுத்து ஞானவேல் இயக்கத்தில் தலைவர் 170 படத்தில் நடிக்கிறார் ரஜினி. லைகா நிறுவனம் தயாரிக்கும் தலைவர் 170 படத்தின் ஷூட்டிங் செப்டம்பர் மாதம் 3வது வாரத்தில் துவங்கவிருக்கிறது. அந்த படத்தில் இஸ்லாமியராக நடிக்கிறார் ரஜினி. உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் தலைவர் 170 படத்தில் போலி என்கவுன்ட்டர்களை எதிர்த்து போராடும் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக வருகிறார் ரஜினி.
​ஃபஹத் ஃபாசில்​ஜெயிலர் படத்தில் மலையாள நடிகர் விநாயகன் வில்லனாக நடித்தார். அந்த ராசி ஒர்க்அவுட் ஆகிவிட்டது. இதையடுத்து தலைவர் 170 படத்திலும் மலையாள நடிகரை தான் வில்லனாக நடிக்க வைக்கிறார்கள். இம்முறை வில்லத்தனத்திற்கு பெயர் போன ஃபஹத் ஃபாசிலை ரஜினியுடன் மோதவிடப் போகிறார்கள். மேலும் சில பிரபலங்களும் தலைவர் 170 படத்தில் நடிக்கவிருக்கிறார்கள்.

​தலைவர் 170 பற்றி இந்த சூப்பர் மேட்டர் தெரியுமா?: ரஜினியின் ஜெயிலர் சென்டிமென்ட்டும் இருக்கு

​சிவராஜ்குமார்​ஜெயிலரில் ரஜினிக்கு அடுத்தபடியாக அதிகம் பேசப்படுபவர் கன்னட நடிகரான சிவராஜ்குமார் தான். கிளைமாக்ஸ் காட்சியில் மட்டுமே வந்தபோதிலும் ரசிகர்களை தன்னை பற்றியே பேச வைத்துவிட்டார். ஷிவாண்ணா வந்த காட்சி பயங்கர மாஸாக இருந்தது. கன்னட திரையுலகம் ஷிவாண்ணாவின் திறமையை வீணடித்துக் கொண்டிருக்கிறது என்கிறார்கள் தமிழ் ரசிகர்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.