Asus Zenfone Series இத்தோட க்ளோஸ், இனி தயாரிக்கவே மாட்டாங்க?! நிறுவனம் வெளியிட்ட பகீர் அறிக்கை!

Asus Zenfone 10 – உடன் அதன் Zenfone உற்பத்தியை நிறுத்த போவதாகவும், இனி Zenfone 11 வெளியாக வாய்ப்பில்லை என்றும் தைவான் டெக் செய்தி வட்டாரங்களில் பரவி வருகிறது. இதனால், டெக் துறை சார்ந்த வல்லுனர்களும் கூட இதற்கு மேல் Zenfone தயாரிக்கப்படாது என்று நம்பி வந்த நிலையில் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக Asus நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

Asus Zenfone உற்பத்தி

Asus நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, Asus Zenfone உற்பத்தியை நிறுவனம் நிறுத்திவிட்டதாக பரவி வரும் தகவலில் உண்மை கிடையாது. Asus Zenfone 10 மாடல் தான் Asus Zenfone சீரிஸின் கடைசி மாடல் இல்லை. சமீபத்தில் வெளியான Zenfone 10 மாடலின் தொடர்ச்சியாக 2024ல் புதிய மாடல் வெளியாகும் என்பதையும் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளது Asus.

2024ல் புது அப்டேட் இருக்கு
தனது வாடிக்கையார்களுக்கு 2024ம் ஆண்டு Zenfone அடுத்த மாடல் வெளியாகும் என்றும், தொடர்ந்து அப்டேட்டுகளை பின்பற்றுமாறும் கூறியுள்ளது. கடைசியாக ஜூன் மாதம் வெளியான Zenfone 10 மாடலில் 5.9 – இன்ச் full-HD+ (2,400 x 1,080 பிக்ஸல்ஸ்) AMOLED டிஸ்பிளே இடம்பெற்றிருந்தது. மேலும் 144Hz ரெஃப்ரெஷ் ரேட்டும் வழங்கப்பட்டிருந்தது.

Asus Zenfone 10 சிறப்பம்சங்கள்

Asus Zenfone 10 – ல் 16GB LPDDR5X RAM உடன் கூடிய octa-core 4nm Qualcomm Snapdragon 8 Gen 2 SoC ப்ராசஸர் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. ஸ்டோரேஜ் வசதியை பொறுத்தவரை 512GB ஸ்டோரேஜ் வழங்கப்பட்டிருந்தது.

Asus Zenfone 10 கேமரா

மேலும், 50 மெகாபிக்ஸல் பிரைமரி Sony IMX766 சென்சார் , 13 மெகாபிக்ஸல் அல்ட்ரா வைட் லென்ஸ் மற்றும் 32 மெகாபிக்ஸல் செல்ஃபீ கேமரா ஆகியவையும் பொறுத்தப்பட்டுள்ளது.

Asus Zenfone 10 பேட்டரி

இந்த மொபைல் Android 13-based Asus ZenUI அடிப்படையில் இயங்க கூடியது. இதன் நீடித்த உழைப்பிற்காக 4,300mAh திறன்மிக்க பேட்டரி மற்றும் 30W wired மற்றும் 15W wireless ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இதில் வழங்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.