HUAWEI Mate 60 Pro : ரிலீஸுக்கு முன்பே வெளியான HUAWEI போன்!512GB ஸ்டோரேஜ், 88W சார்ஜிங் உள்ளிட்ட அல்டிமேட் ஸ்பெக்ஸ்!

ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்பட்ட HUAWEI Mate 60 Pro மொபைல் அறிவிப்பே இல்லாமல் சீனாவில் வெளியாகி விற்பனைக்கு வந்துள்ளது. அதன், சிறப்பம்சங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து பார்க்கலாம்.

​HUAWEI Mate 60 Pro ப்ராசஸர் மற்றும் ஸ்டோரேஜ்HUAWEI Mate 60 Pro மொபைலில் 12GB ரேமுடன் அதிநவீன Kirin 9000S ப்ராசஸர் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 12GB RAM மற்றும் 512GB ஸ்டோரேஜ் வசதி ஆகியவை இடம்பெற்றுள்ளது.
டிப்ஸ்டர் ட்வீட்​​​கேமராHUAWEI Mate 60 Pro மொபைலின் கேமரா வசதியை பொறுத்தவரை பின்புறம் OIS வசதியுடன் கூடிய 50 மெகாபிக்ஸல் கேமரா, 12 மெகாபிக்ஸல் அல்ட்ரா வைட் கேமரா, 48 மெகாபிக்ஸல் அல்ட்ரா மேக்ரோ டெலிபோட்டோ கேமரா ஆகியவையும் முன்புறம் 13 மெகாபிக்ஸல் செல்ஃபீ கேமரா மற்றும் 3D டெப்த்-சென்சிங் கேமரா வழங்கப்பட்டுள்ளது.
​HUAWEI Mate 60 Pro டிஸ்பிளேHUAWEI Mate 60 Pro மொபைலில் 6.82 இன்ச் OLED FHD+ 2720 × 1260 பிக்ஸல்ஸ் டிஸ்பிளே மற்றும் 120Hz LTPO அடாப்டிவ் ரெஃப்ரஷ் ரேட்ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.
​பேட்டரி திறன்HUAWEI Mate 60 Pro மொபைலில் 5000mAh திறன்மிக்க பேட்டரி மற்றும் 88W சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆகியவை பொறுத்தப்பட்டுள்ளன. 50W ஹவாய் வயர்லஸ் சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 20W வயர்லெஸ் ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் வசதியும் உண்டு.
​HUAWEI Mate 60 Pro நிறங்கள் மற்றும் விலைHUAWEI Mate 60 Pro மொபைல் Yadan Black, Ya Chuan Qing, white sand silver, South Waxy Purple ஆகிய நிறங்களில் கிடைக்கிறது. மேலும், சீனாவில் விற்பனைக்கு வந்துள்ள இந்த மொபைல் இந்திய மதிப்பில் 80,000 ரூபாய் என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.