அட்லி இயக்கத்தில் ஷாருக் கான், விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோன் உள்ளிட்டோர் நடிப்பில் அனிருத் இசையில் உருவாகியுள்ள ‘ஜவான்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார்.
இந்நிலையில் இவ்விழாவில் கலந்துகொண்டு பேசிய நடிகர் விஜய் சேதுபதி, “இந்தப் படம் அட்லியாலதான் தொடங்கியது. இதில் நான் நடிக்க அவர்தான் காரணம். அட்லிக்குக் கதாபாத்திரங்களை இயக்க மட்டுமில்லை, ஒரு மனுஷன எப்படி கையாளணும் என்பதும் நல்லா தெரியும். எனக்கு அவரோட ‘தெறி’ படம் ரொம்பப் பிடிக்கும்.
நான் ஒரு பொண்ண லவ் பண்ணினேன். எல்லா இடத்திலயும் ஜானு இல்லாத ராம் இருப்பாங்க. ஆனால், நான் லவ் பண்ண அந்தப் பொண்ணு ஷாருக்கானை லவ் பண்றேன்னு சொல்லிடுச்சு. அவரை (ஷாருக்) பழிவாங்க இத்தனை வருஷம் ஆகிவிட்டது. ஷூட்டிங்ல சீன் லாம் சொல்லி முடிச்சதும் யோகி பாபு ‘பாத்துக்கலாம்னு’ சொல்லுவார். ஒவ்வொரு சீன்லையும் அவராகவே சில ‘இன்புட்ஸ்’ சேர்த்துக் கொள்வார்” என்று யோகி பாபுவைப் புகழ்ந்தார்.
‘இந்தியில் எந்த நடிகையோட நடிக்க ஆசைபடுறீங்க…’ என்று தொகுப்பாளர் கேள்வி கேட்க, அதற்கு விஜய் சேதுபதி “கத்ரினா கைப் கூட ஒரு படம் பண்ணியிருக்கிறேன். அது வெளியாகப்போகிறது!. பொதுவாக எனக்கு எல்லா பொண்ணுங்களையும் பிடிக்கும். ‘All girls are beautiful, i love everyone!'” என்று புத்திசாலித்தனமாக பதிலளித்துத் தப்பினார்.