அட்லி இயக்கத்தில் ஷாருக் கான், விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோன், யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் அனிருத் இசையில் உருவாகியுள்ள ‘ஜவான்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஷாருக் கானின் மாஸ் என்ட்ரியுடன் தொடங்கியிருக்கிறது.
கமெடி நடிகராகவும், கதாநாயகனாகவும் கலக்கிவரும் நடிகர் யோகி பாபு இப்படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இவ்விழாவில் கலந்து கொண்டு பேசினார். அப்போது நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய பாவனா, விளையாட்டாக யோகி பாபுவிடன் இந்தியில் கேள்வி கேட்க, அதற்கு யோகி பாபு, ‘முதல்ல என் மொழியில பேசிக்கிறேன்’ என்று தன் பேச்சைத் தொடங்கினார்.
“தெறி படத்துல தளபதியோட நடிச்சேன். எடிட்டர் ரூபன் தூக்கத்துல என் புட்டேஜஸ் எடுத்துட்டாரு. விஜய் சேதுபதி சாரோட எனக்கு நல்ல கெமிஸ்டரி வொர்க் ஆகுது” என்றார்.
இதற்கிடையில் தொகுப்பாளர் பாவனா ஷாருக்கைப் பார்த்து, ‘போன மாசம் தோனி இவர CSK ல விளையாட கூப்பிட்டாரு. KKR ல இவர எடுப்பீங்களா? ‘ எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு ஷாருக் கான் ஓகே என ‘தம்ஸ் அப்’ காட்டினார்.
இதையடுத்துப் பேசிய நடிகை ப்ரியாமணி, “என்ன மாமா செளக்கியமா. நான் இந்தப் படம் பண்றதுக்கு காரணம் அட்லீ சாரும், ஷாருக் சாரும்தான். விஜய் சேதுபதி ஓட மிகப்பெரிய ரசிகை நான். நயன்தாராவ இதுக்கு முன்னாடி பார்த்திடாத தோற்றதுல இந்தப் படத்தில பார்ப்பீங்க” என்றார்.
ஷாருக்கானைப் போல் ‘சென்னை எக்ஸ்பிரஸ் ‘ பாடலுக்கு ப்ரியாமணியுடன் நடனமாடினார் நடிகர் சுனில்!. இதைப் பார்த்து ரசித்த ஷாருக் மேடையேறி ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ பாடலுக்கு ப்ரியாமணியுடன் சேர்ந்து மேடையில் நடனமாடினார்.