Kamal about rajini: ரஜினியை போல யாரும் இல்லை என சொல்வேன்..ஓபனாக பேசிய கமல்..!

ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் திரையரங்கில் வெற்றிநடைபோட்டு வருகின்றது. கடந்த சில ஆண்டுகளாக ரஜினி மிகப்பெரிய வெற்றிக்காக காத்துக்கொண்டிருந்தார். அந்த தாகத்தை ஜெயிலர் திரைப்படம் தனித்தது என்றுதான் சொல்லவேண்டும். மிகப்பெரிய எதிர்பார்பில் வெளியான இப்படம் அந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து வெற்றி பெற்றுள்ளது.

நீண்ட நாட்களுக்கு பிறகு பழைய ரஜினியை திரையில் பார்த்ததாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். மேலும் இப்படம் இதுவரை ஐநூறு கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இதைத்தொடர்ந்து பல வசூல் சாதனைகளை முறியடித்து புது புது சாதனைகளை ஜெயிலர் படைத்து வருகின்றது.

ஜெயிலர் வசூல் சாதனை

இந்நிலையில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடந்தாண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற விக்ரம் படத்தின் சாதனையை ஜெயிலர் முறியடித்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பாக கமலே தயாரித்து நடித்த திரைப்படம் தான் விக்ரம். கடந்தாண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற இப்படம் உலகநாயகனுக்கு தரமான ஒரு காம்பாக்கை தந்தது.

Jailer: ஜெயிலர் சாதனையை தடுக்க சதியா ? ஷாக்கான படக்குழு..அசராத தலைவர்..!

மேலும் 500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்து. இந்நிலையில் இந்த சாதனையை ஜெயிலர் திரைப்படம் முறியடித்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. இது ஒருபக்கம் இருக்க ரஜினியை பற்றி உலகநாயகன் கமல்ஹாசன் பேசிய பழைய வீடியோ ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றது.

அதாவது உலகநாயகன்
கமல்
ஹாசன் ஒரு பேட்டியில், ரஜினி கமலை போல மெனெக்கெடாமல் நடிக்கின்றார் என ஒரு சிலர் பேசுகின்றனர். அதற்கு உங்களின் கருத்து என்ன என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கமல், அது உங்களுடைய பார்வை, சொல்றவங்க என்ன வேணாலும் சொல்வாங்க, நான் கஷ்டப்பட்டு செய்ற ஒரு விஷயத்தை ரஜினி ஈஸியா செய்றாரு. என்னை கேட்டால் ரஜினி மாதிரி ஒரு ஆளே கிடையாது என சொல்வேன் என்றார் கமல்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

தற்போது விக்ரம் படத்தின் வசூலை ஜெயிலர் முந்தியது என்ற தகவலை அடுத்து இந்த வீடியோ ட்ரெண்டாகி வருகின்றது. இதைத்தொடர்ந்து இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் கமல்ஹாசனை புகழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.