சமீபத்தில் வெளியாகியுள்ள Oppo Find N3 Flip மாடலில் அதிநவீன MediaTek Dimensity 9200 SoC, 6.80இன்ச் டிஸ்பிளே மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் பொறுத்தப்பட்டுள்ளன. இதில் மூன்று ரியர் கேமராக்களும் கூட இடம்பெற்றுள்ளன. மேலும் இதில் என்னென்ன சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன என்பதை பார்க்கலாம்.
Oppo Find N3 Flip ப்ராசஸர்Oppo Find N3 Flip மாடலில் 12GB ரேம் வசதியோடு MediaTek Dimensity 9200 SoC ப்ராசஸர் இடம்பெற்றுள்ளது. முன்னதாக டிப்ஸ்டர்களும் இதே ப்ராசஸர் தான் இடம்பெறும் என்று கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Oppo Find N3 Flip கேமராமுதன் முறையாக ட்ரிபிள் ரியர் கேமராக்களை கொண்ட clamshell-style ஃபோல்டபல் போனாக Oppo Find N3 Flip வெளியிடப்பட்டுள்ளது. அதில், OIS வசதியோடு கூடிய Sony IMX890 சென்சார் 50 மெகாபிக்ஸல் கேமரா, 8 மெகாபிக்ஸல் அல்ட்ரா வைட் கேமரா மற்றும் 32 மெகாபிக்ஸல் டெலிபோட்டோ சென்சார் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 32 மெகாபிக்ஸல் செல்ஃபீ கேமரா இடம்பெற்றுள்ளது.
Oppo Find N3 Flip டிஸ்பிளேOppo Find N3 Flip – ல் 6.8 இன்ச் AMOLED உள்புற டிஸ்பிளே மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டுள்ளது. வெளிப்புற டிஸ்பிளே 3.26 இன்ச் டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது.
Oppo Find N3 Flip பேட்டரிOppo Find N3 Flip – ல் லார்ஜ் பேட்டரி 3285mAh மற்றும் ஸ்மால் பேட்டரி 1018mAh திறனுடன் வழங்கப்பட்டுள்ளது.மேலும், 44W சூப்பர் ஃபிளாஷ் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
Oppo Find N3 Flip – ன் நிறம், விலை மற்றும் ஸ்டோரேஜ்Oppo Find N3 Flip – ல் 12GB ரேம் + 256GB ஸ்டோரேஜ் வசதி மற்றும் 12GB ரேம் + 512GB ஸ்டோரேஜ் வசதி ஆகிய இரண்டு வேரியண்ட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இது மிரர் நைட், மிஸ்ட் ரோஸ், மூன்லைட் ம்யூஸ் ஆகிய மூன்று நிறங்களில் வெளியாகியுள்ளது. இதன் 12GB ரேம் + 256GB ஸ்டோரேஜ் வேரியண்ட் இந்திய மதிப்பில் 77,000 ரூபாய்க்கும், 12GB ரேம் + 512GB ஸ்டோரேஜ் வேரியண்ட் 86,100 ரூபாய்க்கும் விற்பனைக்கு வந்துள்ளது.